சனி, 1 செப்டம்பர், 2018

அாியலூா் மாவட்டம் தத்தனூா் மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி காட்சித்தொடர்பியல் துறை மாணவர்கள் எடுத்த புகைப்படக் கண்காட்சி இன்று நடைபெற்றது. 500 க்கும் மேற்ப்பட்ட புகைப்படங்கள் மற்றும் ஒவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. 





வெள்ளி, 2 மார்ச், 2018

சப்பாத்தி கள்ளிச்செடி சிறந்த மூலிகை

உடலில் உள்ள அனைத்து கட்டிகளையும் கரைக்க பயன்படும் சிறந்த மூலிகையான நாகதாளி எனப்படும் சப்பாத்தி கள்ளிச்செடியை ஏன் பயன்படுத்த தவறினோம்?
Image may contain: flower
புற்றுநோய் கட்டிகள், கட்டிகள் உடலில் ஏன் உருவாகிறது? நமது இரத்தத்தில் உள்ளபல விதமான செல்கள் கனிம கரிம பொருட்கள் கலந்து உள்ளது இவைகள் தான் உடல் செல்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. டிபன்ஸ் மெக்கானிசம் எனப்படும் உடல் செல்களின் தற்காப்பு செயலுக்கு இரத்த அணுக்கள் பெரிதும் உதவுகின்றன நமது உடலுக்குள் நுழையும் நூண்னுயிரிகளை இரத்த அணுக்கள் சண்டையிட்டு அழித்து விடுகின்றது இந்த கழிவுகள் தோலின் வழியாக வெளியேற்ற படுகின்றன. இந்த கழிவுகள் வியர்வை துவாரங்களை அடைத்து உடலில் கட்டிகளை உண்டு பன்னுகிறது.... இந்த கழிவுகள் சிறிது சிறிதாக திரண்டு பெரிதாகி சிவந்து,உடைந்து,சீழாக வெளியேறிய பின்பு புண்ணாக மாறி உடல் ஏற்படுத்தும் நோய் எதிர்ப்பு சக்தி மூலமாக புண் ஆறி விடுகிறது இது தான் இயற்கையான நிகழ்வு அதாவது கிருமிகளை கிருமிகளே அழித்து உடலில் இருந்து வெளியேற்றி உடலை பாதுகாக்கிறது தோலின் தன்மையை கெடுக்கும் சன்ஸ்கிரின் லோசன் மற்றும் அதிகப்படியான கிரீம்களை பயன்படுத்தும் அமெரிக்கா ஐரோப்பியா நாடுகளில் அதிகப்படியான புற்றுநோய் உருவாகிறது என்பதற்கான காரணத்தையும் புரிந்து கொள்ளலாம்....
நாகதாளி எனப்படும் சப்பாத்தி கள்ளியின் மருத்துவ பயன்பாட்டுக்கு மிக முக்கிய காரணம் இதில் உள்ள நுண்ணூட்டங்களே, மிகையாக. உள்ள கால்சியம், பொட்டாசியம்,பாஸ்பரஸ், மெக்னீசியம் சத்துகளும் உயர்தரமான நார்சத்தும் நிறைந்து உள்ளது இதில் விட்டமின் B மிகவும் அதிகமாக இருக்கும். இதில் இருக்கும் மிகையான பொட்டாசியம் இரத்த அழுத்தம் மிகையாகாமல் பாதுகாக்கிறது இரத்த நாளங்களில் உள்ள கழிவுகளை நீக்கி இதய நோய்கள் வராமலும் பாதுகாக்கும்.
வரண்ட நிலங்களில் ஆடு மாடு மேய்க்கும் போது நாவரட்சிக்கும், வெய்யில் ஏற்படுத்தும் உடல் சோர்வை போக்கவும் உஷ்ணத்தை குறைக்கவும் இந்த சப்பாத்தி கள்ளி பழம் உதவி புரியும்.
பழங்குடியினர் மத்தியில் இந்த சப்பாத்தி கள்ளி சிறந்த உணவாக மருந்தாக பயன்படுத்துவதை நான் உணர்ந்து இருக்கிறேன். நாங்கள் தொலை தூரமாக காடுகளில் திரியும் போது ஓடைகளில் தேங்கி இருக்கும் அசுத்தமான நீரை நன்னீராக மாற்ற சப்பாத்தி கள்ளியின் மடலில் உள்ளே இருக்கும் ஜெல்லை எடுத்து கலங்கிய அசுத்தமான நீருடன் கலந்து வைக்க சிறிது நேரத்தில் சுத்தமான நீர் மட்டும் கிடைக்கும் கழிவுகள் வீழ்படிவாக கீழே இருக்கும் இந்த தண்ணீரை குடிக்கும் போது உடலானது பெரும் ஆற்றல் பெருகிறது புத்துணர்வுடனே இருக்கும் எவ்வளவு தூரம் நடந்தாலும் சோர்வோ பசியோ எடுக்காது இது எனது அனுபவத்தில் உணர்ந்தது. இருளர் இனமக்கள் கக்குவான் நோய்க்கு இதன் பழத்தை நெருப்பில் வாட்டி குழந்தைகளுக்கு கொடுக்க பூரண குணமாவதையும் நான் அறிவேன்.
நாகதாளியின் பயன்பாடுகள்.
1.சப்பாத்தி கள்ளியின் பசையை மேல் பூச்சாக பயன்படுத்தி வீக்கத்தை போக்கலாம்.
2.உடலில் ஏற்படும் எந்தவொரு கட்டியாக இருந்தாலும் இதன் மடலின் உள்ளே இருக்கும் சோற்றுடன் குவாட்ஸ் எனப்படும் வெள்ளைகல்லை அறைத்து இரண்டையும் சமமாக சேர்த்து அறைத்து கட்டிகளின் மீது பற்று போட கறைந்து விடும் அதுவும் அக்குள் கழுத்து பகுதிகளில் வரும் கட்டிகளுக்கு சிறந்த மருந்து இதுவே. ஓரிரு நாளில் கட்டி கரைந்து விடும்.
3.நாகதாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் குரல்வளை, பித்தப்பை,மலக்குடல், சார்ந்த அனைத்து குறைபாடுகளும் நீங்கும். காச இருமல், இரத்தம் கக்குதலும் தீரும்.
4. வைரஸ் காய்ச்சலால் பாதிக்கபட்டவர்களுக்கு பித்தப்பை வீங்கி விடும் இதனை சுரக்கட்டி(Enlargement of Spleen) என்பார்கள் இதனை தீர்க்க நாகதாளி பழத்தை கொடுக்க உடனடியாக குணம் கிடைக்கும்
5.ஞாபகமறதி எனப்படும் அல்ஸைமர் நோய்க்கு இது மருந்தாக பயன்படுத்தலாம் இந்த பழத்தை தொடர்ந்த எடுத்துகொள்ள கண் பார்வை கூர்மையாகிறது என்றும் ஏடுகளில் உள்ளது.
6.சப்பாத்தி கள்ளி பழத்தில் இருக்கும் உயர்தரமான நார்சத்தால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கறைத்து வெளியேற்றி உடல் பருமனை குறைக்கிறது அதனால் தான் பிரேசில் போன்ற நாடுகளில் இதிலிருந்து எடுக்கப்படும் Extract உடல் குறைப்புக்கு மருந்தாக பல நூறு கோடி ரூபாய்க்கான வியாபாரம் நடைபெறுகிறது என்பதையும் உணருவோம் . சித்த மருத்துவத்தில் இதனை தீ நீராக செய்து பயன்படுத்தி வந்தால் உடல் குறையும் சர்க்கரை நோயும் கட்டுபடுகிறது என்று குறிப்புகள் உள்ளது.கல்லீரல் பாதிப்படைந்து உருவாகும் மகோதிரம் எனப்படும் பெருவயிறு நோய்க்கு இது சிறந்த மருந்தாகும்.
உலகின் மிகச்சிறந்த இயற்கை உரம் சப்பாத்தி கள்ளி என்றால் மிகையாகாது....
தென்னை மரத்தை சுற்றி இரண்ட்டிக்கு குழி எடுத்து அதில் சப்பாத்தி கள்ளியின் மடல்களை வெட்டி பரப்பி இதன்மீது கொஞ்சம் கல்உப்பையும் அடுப்பு கரியையும் போட்டு மண் மூடி விட ஆறு மாதத்தில் தென்னை மரம் கருகருவென்று இருப்பது மட்டுமின்றி தென்னம் பிஞ்சு உதிர்வது அப்படியே மட்டுபடும் ஒரு வருடத்தில் சுமார் 300 தேங்காய் வரை காய்க்கும் தென்னையை தாக்கும் பலவிதமான நோய்கள் நெருங்கவே நெருங்காது இதுவும் அனுபவ ரீதியான உண்மை.
நிலங்களில் இதனை பயன்படுத்துவதில் உள்ள சிரமம் இதில் உள்ள கூர்மையான முட்கள் தான் அதனை போக்க எளிய வழிமுறை. வெட்டி போடபட்ட மடல்களின் மீது எள்ளுபுண்ணாக்கை தூவ ஒரு வாரத்தில் முட்கள் இருந்த இடம் தெரியாமல் அழுகிவிடும் பிறகு அத்தனை வயல்களிலும் பயன்படுத்தி மண்ணை வளமாக்கி கொள்ளலாம்.
ஆடு மாடு மேய்க்கும் போது கால்களில் இந்த முள் ஆழமான சென்று விடும் அப்பொழுது எள்ளை அரைத்து முள் உள்ள இடத்தில் கட்ட ஒரிரு நாளில் தூள் தூளாக வந்து விடும்.
Image may contain: plant, outdoor, nature and food
தென்அமெரிக்க பழங்குடியினர் இதனை உணவு பொருளாகவே பயன்படுத்தி வருகின்றனர் Tunas என்ற பெயரில் இதன் பழங்கள் விற்க்கபடுகிறதாம்.எங்கோ படித்தது.
இவ்வளவு சிறப்பான சப்பாத்தி கள்ளி பழத்தை நாமும் பயன்படுத்த முயல்வோம் ஏனெனில் இன்று புற்றுநோய் ஓர் பயமுறுத்தும் வகையில் உருவெடுத்து வருகிறது. இந்த பழத்தில் இருக்கும் Flavonoid,Polyphenol போன்ற வேதி பொருட்களால் புற்றுநோய் செல்களை தாக்கி அழிக்கும் பண்பு உள்ளது என மேலை நாட்டு ஆய்வுகள் கூறுகிறது இந்த பழம் Antioxidant ஆக செயல்பட்டு உடல் செல்களுக்கு அதிகபடியான ஆக்சிஜனை கொண்டு செல்கிறது ....
நமக்கு தெரியும் இரத்த ஒட்டம் தடைபெற்ற இடங்களில் தான் புற்றுநோய் செல்கள் உருவாகிறது உடலில் உள்ள செல்களுக்கு அதிகபடியான ஆச்சிஜன் தேவை புற்றுசெல்களுக்கு சிறிதளவு ஆச்சிஜனே போதும். அதனால் தான் இவைகள் பல்கி பெருகி வருகிறது இந்த பழத்தில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் செல்களுக்கு ஆக்சிஜனை அதிகரித்து புற்றுசெல்களை அழிக்க உதவி புரிகிறது....
Image may contain: plant, outdoor, food and nature
எல்லா இடங்களிலும் எளிமையாக கிடைக்கும் சப்பாத்தி கள்ளி பழம். கொஞ்சம் மெனகெட்டாலே போதும். இது நமக்கான உணவு மருத்துவம். செலவில்லாத சிறந்த உணவு மருந்து.

வெள்ளி, 27 ஜனவரி, 2017

மின்மினிபூச்சி

நீங்கள் கிராமத்தில் வாழ்ந்திருக்கிறீர்களா? அல்லது கோடைகால இரவு நேரங்களில் கிராமத்துக்குப் போனதுண்டா? அது ஒரு சுவையான அனுபவம்தான். அதனை அனுபவித்து உணர்ந்தால்தான் அறிய முடியும். கோடையிலிருந்து கார்த்திகை மாதம் வரை, முக்கியமாக மே முதல் ஆகஸ்ட் மாதம் வரை அறுவடை முடிந்த வயல் வெளிகளை ஒட்டியும், நீர்நிலைகளை ஒட்டியும் இருக்கும், மரங்களில் இரவு நேரத்தில் வெளிச்சப் பட்டாளங்கள் திரியும்.
மனதை மயக்கும் பசுமஞ்சள் நிறம். நாம் சொக்கியே போவோம் அந்த ஒளியின் நிறத்தில். நீங்கள் பார்த்தீர்கள் என்றால் ஆச்சரியத்தில் பிரமித்து விடுவீர்கள். மரத்தை சுற்றித் திரிந்து பறக்கும் குட்டி மின்னல் கூட்டம் ஒரு பக்கம். தரையில் புல் நுனியில் அமார்ந்து தியானம் செய்வது போல மினுக்கும் விளக்கு வண்டுகள் மறு பக்கம். இரண்டுமே நம்மை ஆச்சரியத்தால் கட்டிப் போட்டுவிடும். விளக்கு பூச்சி விட்டு விட்டு வெளிச்சத்தை பீற்றி அடிக்கும். அதற்குப் பதில் சொல்வது போல கீழே கிடக்கும் மினுக்கும் வண்டும் அதற்கு ஈடாகவே விட்டு விட்டுப் பிரகாசிக்கும். நிஜமாலுமே அது உண்மைதான். ஆனால் காதல் தூதை முதலில் அனுப்புவர் பெண்ணேதான். பின்னர்தான் ஆண் பதிலுக்கு சம்மதம் தெரிவிப்பார். கீழே கிடக்கும் பெண் பூச்சியை மையம்/மையல் கொண்டுதான் மேலே பறக்கும் ஆண் பூச்சி ஒளியைத் தூதுவிடுகிறது தன் காதலுக்கு. அதற்கு எழுதப் படிக்க, பேசத் தெரியாதல்லவா? காதலுக்கு விழி வழி தான் பேச வேண்டுமா? ஒளி வழியும் கூட பேசலாமே, இணக்கம் தெரிவிக்கலாமே! அதனால் தனக்குத் தெரிந்த மொழியில் தூதுவிடுகிறது பூச்சி.. தன் இணைவுக்கு இணக்கமா என ஒளியால் கேட்கிறது பெண். ஒளியின் வழி மொழியிலேயே ஆணும் சம்மதம் தெரிவிக்கிறது. 
இரவு நேரங்களில் சுற்றித் திரியும் மின்மினிக்களின் வாழ்க்கை இப்படித்தான். இவைகளின் அளவு 5 to 25 மி.மீ தான். (up to 1 inch).இவைகளில் 2000 வகைகள் உள்ளன. பொதுவாக இவை இரவு நேரங்களில் மட்டுமே சஞ்சரிக்கும், சிலவகை பகலிலும் வரும். ஆனால் இரவில் இருட்டில் சுற்றுபவர்களுக்குத்தானே விளக்கும், வெளிச்சமும் வேண்டும். அதனால்தான் இந்தப் பூச்சிகள் ஒரு விளக்கைச் சுமந்து கொண்டு, அது தரும் ஒளியில் ஆகாயத்தில் அழகாக, அற்புதமாய், தன்னைத் தானே மினுக்கி, மயக்கி வலம் வருகிறது. ஆண் பூச்சியின் மேல் தோல், வண்டின் தோல் போல கடினமாக இருக்கும். பெண்ணோ பரம சாது.. ரொம்ப மென்மையானவளும் கூட. அவளுக்கு தோல் கடினம் கிடையாது. பஞ்சு போல மென்மையாக இருக்கும். அது மட்டுமா, அவள் பறந்து ஓடிவிடாமல் இருக்க, அவளின் இறக்கை உருவாக்கப்படவில்லை. அது மட்டுமல்ல பெண் முதிர்ச்சி அடைந்துவிட்டால் அவள் தாய்மைப் பொறுப்பேற்க உணவு உண்ணமாட்டாள். அதற்காகவே பறப்பது ஆண் மட்டுமே. பெண்ணுக்கு அந்த விடுதலை இல்லை. அவளின் கரங்கள், பறக்கும் கரங்கள் வெட்டப்பட்டுவிட்டன இயற்கையால். அதிக பட்சம் பெண் பூச்சி ஒரு செடி/புல்லின் மேல் ஏறலாம். ஆணும் பெண்ணும் ஒரு குறிப்பிட்ட கால கதியில் ஒளியை விட்டு விட்டுப் பிரகாசிக்கும். பெண் சம்மதம் தெரிவித்த பின், இருவரும் இணை சேருவார்கள்.. பின்னர் இயற்கை நியதிப்படி பெண்மை கருவுரும். பின்னர் அங்கேயே கொஞ்ச நாள் கழித்து பெண், பாதுகாப்பாக முட்டைகளை ஈர மண்ணில் புதைத்து வைப்பாள். முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் சுமார் ஒரு வருட காலம், இளம் பிள்ளையாய் சுற்றித் திரியும். கோடை வந்ததும்தான் அவர் இணை சேரும் பக்குவம் அடையும். பெண் இறக்கை இன்றியே காலம் கழிப்பாள்.

minmini_450அது சரி.. இந்த வெளிச்சம் எப்படி என்கிறீர்களா? அந்த ஒளி மின்மினியின் உடலிலிருந்து உருவாகிறது. மின்மினிப் பூச்சிகள் இளம்பருவத்திலிருந்தே மினுக்கும் தன்மையவை. ஆனால் இதில் இன்னொரு ஆச்சரியமும் அடங்கி இருக்கிறது. அதுதான் எப்படி இவை இந்த ஒளியால் இறந்து போகாமல் அதனூடேயே வாழ்கின்றன. பொதுவாக, ஒரு பொருள் ஒளிவிடும்போது, அதிலிருந்து பெரும்பாலும் வெப்பமே வரும். அதாவது ஒரு மின் விளக்கில் 90% வெப்பமும், 10% ஒளி மட்டுமே வரும். அப்படி என்றால் இந்த குட்டியூண்டு பூச்சி வெந்து கருகிவிடாதா? இங்கே அப்படி எல்லாம் நடப்பது இல்லை. மின்மினியின் உடலில் உருவாகும் ஒளி குளிர் ஒளி(cold light) /உயிர் ஒளி (Bioluminescence)என்றே அழைக்கப்படுகிறது. ஏன் தெரியுமா? அந்த ஒளியிலிருந்து இந்தப் பூச்சிகள் ஒரு மந்திரக் கோலை தன் வயிற்றில் வைத்துள்ளன. அதுதான் ஒளியைத் தரும் சிறப்பு செல்கள். அவை முழுக்க முழுக்க ஒளியை மட்டுமே தரும், துளிக்கூட வெப்பம் தருவதில்லை. அதாவது மின்மினியிலிருந்து வரும் ஒளியில் 100% ஒளி மட்டுமே. வெப்பம் பூஜ்யம் டிகிரிக்கும் குறைவே..!
ஏனெனில் மின்மினியின் உடலிலிருந்து பார்வை ஒளியலைகள் (Visible light) மட்டுமே உருவாக்கப்படுகின்றன. புறஊதாக்கதிரோ, அகச்சிவப்பு கதிரோ உற்பத்தி செய்யப்படுவதில்லை. அது மட்டுமல்ல, அதன் வெப்ப அளவு, பூச்சி எவ்வளவு விரைவில் பிரகாசிக்கிறதோ அதற்குத் தகுந்தாற்போல இருக்கும். விரைவான காலகதி என்றால் வெப்ப அளவு அதிகம். இரு மினுக்குகளுக்கு இடையே, கொஞ்ச நேரம் அதிகமானால், ஒளியின் வெப்பம் கொஞ்சம் குறைவு. இந்த ரிதமால்தான் ஆண்கள் ஈர்க்கப்படுகின்றன. இணை தேட மட்டுமல்ல, சமயத்தில் இரை தேடவும், இந்தப் பூச்சிகள் ஒளியைத் தூண்டிலாகப் போடுகின்றன. 
மின்மினியின் வயிற்றுப் பகுதியில் ஒளியை உருவாக்கும் சிறப்பு ஒளிசெல்கள் (Photcytes) உள்ளன. இதில் லூசிபெரின் என்ற வேதிப்பொருள் இருக்கிறது. இது பூச்சியில் உடலுக்குள் வரும் காற்றுக் குழாயிலிருந்து (Trachea) ஆக்சிஜனை எடுத்துக் கொள்கிறது. பின் லூசிபெரினும், ஆக்சிஜனும் லூசிபெரேஸ்(Luciferase) என்ற நொதியினால் இணைந்து ஆக்சிலூசிபெரிலின் (oxyluciferin) என்ற பொருளாக மாறுகிறது. அப்போதே ஒளியையும் கக்குகிறது மின்மினியின் வயிற்று செல்கள்.
minmini_371இந்த ஒளியின் அலை நீளம் 510 & 670 நானோ மீட்டர். இதன் நிறம் வெளிர் மஞ்சளிலிருந்து பசு மஞ்சள், இளஞ்சிவப்பு பச்சை ஆகியவை.ஆனால் இதன் ஒளி விடும் கட்டுப்பாட்டை நிறுத்தி, ஓடச் (On -Off mechanism) செய்பவைகள் நரம்பு செல்கள் + ஆக்சிஜன் வரத்து மட்டுமே. அதன்கடை நிலை லூசிபெரேஸ் மட்டும் சமீபத்தில் அறியப்பட்டுள்ளது. அதன் மரபணுவும் பிரிக்கப்பட்டுவிட்டது. இவ்வளவு அறிவியல் முன்னேறிய நிலையிலும், நம்மால் மின்மினி போன்ற ஒளியை உற்பத்தி செய்ய முடியவில்லை. லூசிபெரின் உருவாக்கம் இன்னும் முழுமையாய் விஞ்ஞானிகளுக்குப் பிடிபடவில்லை.
முடிவாக ஒரு வரலாற்றுத் தகவல்:
முதல் உலகப்போர் நடந்த காலத்தில், இராணுவ முகாம்களில், மின் விளக்கு வசதி கிடையாது. அப்போது காயம் பட்ட வீரகளுக்கு சிகிச்சை அளிக்கவும், அறுவை சிகிச்சை செய்யவும், லாந்தர் விளக்கில் மின்மினியைப் பிடித்துப் போட்டு வைத்துக் கொண்டு, சிகிச்சை செய்தனராம். அது போல, இராணுவ வீரர்கள் கடிதம் படிக்க மின்மினியின் உலர்ந்த உடலைப் பொடி செய்து, அதில் உமிழ் நீர் உமிழ்ந்து, கலந்து அதன் ஒளியில் படித்தனராம். இப்போதும் கூட, ஆதிவாசிகளின் இல்லங்களில் இரவில் மின்மினி விளக்குகள்தான் கண்ணாடி பெட்டியில்/லாந்தரில். பழங்கால சீனர்களும், மின்மினியை கண்ணாடி பாட்டிலில் அடைத்து வெளிச்சம் தர பயன்படுத்தினர்.

ஜாக் லண்டன்எழுத்தாளர்!

இளம் வயதில் ஊர் சுற்றித் திரிந்தான். ஒரு முறை இவனை காவல் துறையினர் கைது செய்து நீதிபதி முன்பு நிறுத்தினர். 'பிச்சை எடுத்து வாழ்ந்தான். பொது மக்களின் அமைதியான வாழ்வைக் குலைத்தான்' என குற்றம் சாற்றப்பட்டு ஒரு மாத காலம் சிறையில் அடைக்கப்பட்டான். சிறையில் கடுமையான கல்லுடைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டான்.
jack londonஆறு ஆண்டுகள் கழித்து உலகம் அவனைப் போற்றிப் புகழ்ந்தது. அவனிடம் கையெழுத்துப் பெற நீண்ட வரிசையில் மக்கள் காத்துக் கிடந்தனர். இலக்கிய வானிலே தோன்றிய புதிய தாரகை, சுடர் விளக்கு என்றெல்லாம் அவனை அறிஞர்களும், நாவலாசிரியர்களும், இதழாளர்களும் போற்றிப் புகழ்ந்தனர். அவன் தான் அமெரிக்க நாட்டு நாவலாசிரியர் ஜாக் லண்டன்!
அமெரிக்க நாட்டில் சான்பிரான்சிஸ்கோ நகரத்தில் ஜாக் லண்டன் ஃபுளோரா வெல்மேன் தம்பதியினருக்கு மகனாக 1876 ஆம் ஆண்டு சனவரி மாதம் 12 ஆம் நாள் பிறந்தான்.
பத்தொன்பது வயதுவரை பள்ளிக் கூடத்தையே எட்டிப் பார்க்கவில்லை. அவன் இளம் வயதில் ஏழ்மையிலும், வறுமையிலும் வாழ்ந்தான். சிறு வயதில் பள்ளிக்குச் சென்று கல்வி கற்பதை வெறுத்து ஓடியவன் அவன். ஒரு நாள் அவன் எதேச்சையாக ஒரு நூல் நிலையத்திற்குள் நுழைந்தான். நூல்களைப் படிக்க அல்ல, நூல்களைப் படித்துக் கொண்டிருப்பவர்களைத் தொல்லை செய்வதற்கு. ஆனால், அவன் கண்ணில் 'ராபின்சன்' குறித்த நூல் தென்பட்டது. அதை எடுத்து ஒரே மூச்சில் படித்து முடித்தான். நூல்கள் மீது காதல் கொண்டான். நூல் நிலையத்தில் உள்ள அனைத்து நூல்களையும் ஆர்வத்துடன் படித்தான். அவன் மனதில் புதிய உற்சாகம் ஏற்பட்டது. ஓரு நாளைக்கு பதினைந்து மணிநேரம் நூலகத்தில் படித்தான்.
“இனி அறிவினால் உழைத்து உணவைத் தேடிக் கொள்ள வேண்டும்” என முடிவு செய்தான். தமது பத்தொன்பதாவது வயதில் உயர் நிலை வகுப்பில் சேர்ந்து கல்வி கற்றான். கல்வி மீது மிகுந்த ஆர்வம் கொண்டு படித்து தேர்வுகளில் முதன்மையான மாணவனாகத் தேர்ச்சி பெற்றான். மதிப்பெண்களைப் பார்த்து பல்கலைக்கழகம் அவனை உயர்கல்வி பயிலச் சேர்த்துக் கொண்டது.
வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் வெளியே விரட்டப்பட்டான். எந்த வேலையையும் செய்யத் தயாரானான். உணவு விடுதியில் எச்சில் தட்டுகளைக் கழுவினான். தொழிற்சாலைகளிலும், துறைமுகத்திலும் கூலி வேலை செய்து வாழ்ந்தான்.
ஆனாலும், மிகப்பெரிய எழுத்தாளனாக வர வேண்டுமென்ற கனவு கண்டான். புகழ் பெற்ற எழுத்தாளர்களின் நூல்களைத் தேடித்தேடி படித்தான். தமது கனவை நனவாக்கிட எழுத ஆரம்பித்தான். தினமும் ஐந்தாயிரம் வார்த்தைகள் வரை எழுதினான். தமது கதைகளையும், நாவல்களையும் பல இதழ்களுக்கு அனுப்பினான். அவை வெளியிடப்படாமல் அப்படியே திரும்பி வந்தன. அதனால் மனம் தளர்ந்து விடவில்லை ஜாக் லண்டன்! ஒரு நாள் திடீரென்று அவனது கதையை ஒரு இதழ் வெளியிட்டது. அவனது கதைக்கு முதல் பரிசு கிடைத்தது. அதாவது நான்கு பவுன்!
ஓரு நாள் உறுதியான முடிவுக்கு வந்தான். அதாவது "இனி கூலி செய்வது இல்லை, வாழ்க்கை முழுவதும் இலக்கியத்திற்காகவே" - இந்த முடிவை 1898 ஆம் ஆண்டு எடுத்தான். ஐந்தாண்டுகள் கழித்து 1903 ஆம் ஆண்டு ஆறு நாவல்கள், நூற்று இருபது சிறுகதைகள் எழுதினான். அவை பல இதழ்களில் வெளியாயின. பல பதிப்பகங்கள் நூல்களாக வெளியிட்டன. அதன்பின் அமெரிக்க இலக்கிய உலகில், மதிக்கப்படுபவராக, பாராட்டப்படுபவராக உயர்ந்தார் ஜாக் லண்டன்!
'கால் ஆப் தி ஒயில்ட்' (The call of the wild) என்ற புகழ் பெற்ற நாவலை எழுதினார். அந்நாவல் மூலம் நானூறு பவுன்கள் அவருக்குக் கிடைத்தது. ஆனால், பதிப்பாளர்களும், அந்நாவலை சினிமாவாக எடுத்தவர்களும் இரண்டு லட்சம் பவுன் லாபம் ஈட்டினார்கள்.
ஜாக் லண்டன் 1896 ஆம் ஆண்டு அமெரிக்க சோசலிச தொழிலாளர்கள் கட்சியில் சேர்ந்தார். சோசலிசக் கொள்கைகளை தமது உரையில் நாடெங்கும் பரப்புரை செய்தார். அவரது சோசலிசக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ‘வர்க்கங்களின் போர்’ (The war of the Classes), ‘புரட்சி’ (Revolution) முதலிய தொகுதிகளாக வெளியிடப்பட்டன. ‘White Fang ‘, ‘The sea wolf‘, ‘The Iron Heel‘ முதலிய புகழ் பெற்ற நாவல்களையும் படைத்தளித்தார்.
தமது நாற்பதாவது வயதில் 1916 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் நாள் கலிபோர்னியாவில் மறைந்தார். ஐம்பதுக்கும் மேலான நாவல்களும், ஏராளமான சிறுகதைகளும் எழுதி உள்ளார். இளமையில் வறுமையில் வாடிய இவருக்கு இறக்கும் போது வருமானம், அமெரிக்கக் குடியரசுத் தலைவரின் ஊதியத்தைப் போல இரண்டு மடங்கு ஆகும்!

வெள்ளி, 23 டிசம்பர், 2016

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு என்ற இந்து - ஜாதி ஆதிக்க - ஆணாதிக்கப் பண்பாட்டு விழாவை அனைத்து அரசியல் கட்சிகளும் ஓட்டுக்காக ஆதரிக்கின்றன. ஓட்டு வேட்டையாடப் போனவர்கள் ஆதரிப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. மே 17 இயக்கம், இளந்தமிழகம் இயக்கம் போன்ற ஆக்கப்பூர்வமான கடமைகளை மேற்கொள்ளும் அமைப்புகளும் ஜல்லிக்கட்டை ஆதரித்துப் போராட்டத்தில் இறங்கியது நமக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. அவர்கள் வைத்துள்ள வாதங்கள் பார்ப்பனிய ஆதிக்கத்துக்கு வழிவகுப்பதாகவே இருந்தது. அந்த வாதங்களையும் அவற்றிற்கு நமது விளக்கங்களையும் சொல்ல விரும்புகிறோம்.
தடையைப் பெறுவதற்கு நீதிமன்றத்தில் வழக்காடி பீட்டா என்ற அமைப்பு People for the Ethical Treatment of Animals (PETA) மீது நமக்குக் கடுமையான விமர்சனங்கள் உண்டு. அந்த அமைப்பில் முன்னணியில் இருப்பவர்கள் பார்ப்பனர்கள், குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பார்ப்பனர்கள் என்பது நாம் அறிந்ததுதான். ஆனால் இந்த வழக்கைப் பொறுத்தவரை வழக்காடியது பீட்டாவாக இருந்தாலும், அந்த வழக்கால் கிடைத்த தீர்ப்பு தமிழர்களின் பண்பாட்டு உயர்வுக்கு வழிவகுக்கும் என்பது உறுதி. இதே தீர்ப்பை அடிப்படையாக வைத்து நாளை இறைச்சி உணவுக்கேகூட தடை வரலாம். வரும் போது அவசியம் எதிர்த்து நிற்போம்.
இளந்தமிழகம் இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் வினோத் விடுத்துள்ள அறிக்கையில்,
“சல்லிகட்டு போன்ற மாடுபிடி போட்டிகளில் உழவுத் தொழில், மாடு இவற்றோடு தொடர்புடைய சில சாதிகள் தான் ஈடுபடுகின்றன. வட்டாரத்தன்மையோடு அந்தந்த சாதியினர் மட்டுமே பங்கெடுக்க முடிகிறது. பெண்களின் பங்கெடுப்பே இல்லை என்று சொல்கிறார்கள். இதை சனநாயகப்படுத்தி வளர்த்தெடுக்க வேண்டுமே தவிர ‘தடையே இருக்கட்டும்’ என்று கருதுவது சரியல்ல. மாடுபிடிப் பண்பாடு என்பது வெறும் ஆதிக்கவாதிகளின் பண்பாடல்ல, வேடிக்கை பார்க்கும் சமீந்தாரிய பண்பாடல்ல. விலங்குகளை அடக்கி உழவில் ஈடுபடுத்திய வரலாற்றுப் போக்கின் நீட்சி. இது உழவுத் தொழிலில் ஈடுபடும் உழைக்கும் மக்களின் பண்பாடு.”
தாழ்த்தப்பட்டவர்கள் பங்கேற்க முடிவதில்லை என்ற உண்மையை மறைக்க எவ்வளவு பாடுபடுகிறார்கள்? வட்டாரத் தன்மையோடு அந்தந்தச் சாதியினர் மட்டுமே பங்கேற்க முடிகிறதாம். ஏன் ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்களே வாழவில்லையா?
உழவுத்தொழிலில் தாழ்த்தப்பட்டவர்கள் பெரும்பாலும் கூலித்தொழிலாளர்களாகவே உள்ளனர். பிற்படுத்தப்பட்டோரிலும், குறிப்பாக சுமார் 20 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்கள், விவசாயம் மட்டுமல்லாமல் கந்துவட்டி, பண்ணைகள் போன்ற உப தொழில்களால் வருமானம் பெற்றுக்கொண்டிருக்கும் வசதி படைத்த பிற்படுத்தப்பட்டவர்கள் தான் ஜல்லிக்கட்டு மாடு வளர்க்க முடியும்.
உழைக்கும் மக்களின் பண்பாடு என்றால் ஜல்லிக்கட்டு நடக்கும் கிராமங்களில் எத்தனை தலித்துகள் ஜல்லிக்கட்டு மாடு வைத்துள்ளனர் எனக் கூற முடியுமா? தலித்துகள் மாடு வளர்ப்பது பற்றி மனுசாஸ்திரம் கூறுகிறது,
“அவர்களுக்கு உலோக பாத்திரங்கள் கூடாது. அவர்கள் தீண்டின பாத்திரங்களைச் சுத்தம் செய்தாலும், பரிசுத்தமாகாது. அவர்கள் மாடு முதலிய வைத்துக்கொண்டு ஜீவிக்கக்கூடாது.”
- அத்தியாயம் 10 ஸ்லோகம் 51
இந்த மனுசாஸ்திரக் கட்டுப்பாடுகளை மீறி தலித்துகள் இப்பொழுதுதான், ஒரு நாளைக்கு 10 லிட்டர் பால் கொடுக்கும் மாடுகளை வளர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். பால் கொடுக்காத - வருமானம் தராத - ஜல்லிக்கட்டு மாடுகளை இன்னும் தலித்துகள் வளர்க்கவே தொடங்கவில்லை. உழவுத்தொழில் உண்மையாகவே உழைக்கும் தாழ்த்தப்பட்டவரிடம் பல ஆயிரம் ஆண்டுகளாக நிலமும் இல்லை, ஜல்லிக்கட்டு மாடும் இல்லை. பிறகு எப்படி இது உழைக்கும் மக்களின் பண்பாடாக முடியும்?
பிற்படுத்தப்பட்டவர்களிலும் 2 ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை வைத்திருக்கும் சராசரி விவசாயிகள் தான் அதிகம். அவர்களால் வருமானம் வராத எந்த உயிரையும் வளர்க்க முடியாது. வீட்டில் உள்ள ஆண், பெண், குழந்தைகள் அனைவரும் வயலில் வேலை செய்தால்தான் பட்டினி இல்லாமல் வாழமுடியும் என்ற நிலையில்தான் இன்றைய விவசாயம் உள்ளது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு மாட்டை வளர்க்கும் வலிமை பொருளாதாரத்திலும் வலுவானவர்களுக்கே உண்டு.
குறிப்பிட்ட சில கிராமங்களில் பணத்திமிரும், ஜாதித்திமிரும் கொண்ட ஒரு சிலரால் நடத்தப்படும் இந்த விளையாட்டை ஒட்டுமொத்தத் தமிழர்களின் பண்பாடு என்று கூறுவீர்களானால், இங்கு 90 விழுக்காட்டு மக்கள் தமிழர்களே இல்லை என்று கூறும் நிலைதான் ஏற்படும். மேலும் இளந்தமிழகம் இயக்கம் கூறுகிறது,
“(ஜல்லிக்கட்டு) ஒரு வட்டார ஒரு சாதிப் பண்பாடேயானாலும் அதுவும் பன்மைத்துவம் கொண்ட ஒரு சமூகத்தின் ஒரு கூறுதான். எல்லாத் தரப்பு, வட்டார, சாதி பண்பாடுகளையும் உட்செரித்துதான் பன்முகத் தன்மையோடு தேசப்பண்பாடு, சமூகப்பண்பாடு வளர்ச்சி பெறுகிறது. அது சல்லிக்கட்டு, ஏறுதழுவல், மஞ்சுவிரட்டு போன்ற அனைத்து மாடுபிடிப் போட்டிகளைக் கொண்டாடும் பண்பாட்டையும் சேர்த்துதான்.”
வினோத்,செய்தி தொடர்பாளர், இளந்தமிழகம் இயக்கம். 09.01.2015
பன்முகத் தன்மை என்ற பெயரில், எந்தவிதக் குற்றஉணர்வும் இல்லாமல் - சிறிதும் கூச்சப்படாமல் - ஜாதி ஆதிக்கத்தை நியாயப்படுத்துகின்றன மேற்கண்ட வரிகள். நான் ஆதிக்க ஜாதிக்காரன் என்று திமிராகப் பூணூல் போட்டுத் திரியும் பார்ப்பானின் போக்கும், இந்த வரிகளின் பொருளும் ஒன்றுதான். மேற்கண்ட வரிகளை சமுதாயத்தில் உள்ள அனைத்துச் சீரழிவுப் பழக்க வழக்கங்களைக் காப்பதற்கும் பயன்படுத்தலாம்.
பிறக்கும்போதே சேரியில் வாழ வைப்பது, ஒரு ஊரின் அனைத்து நல்லது கெட்டதுகளிலும் ஒதுக்கி வைப்பது, இறந்த பிறகும் சுடுகாட்டிலும் பறையர் சுடுகாடு, பள்ளர்சுடுகாடு, படையாட்சி சுடுகாடு எனப் பிரித்து வைத்திருப்பது என அனைத்துமே இங்கு பண்பாடு, பழக்க வழக்கம்தானே? இதையெல்லாம் உட்செரித்துத்தான் உங்கள் தேசத்தின் பண்பாடு வளர்ச்சி பெறும் என்றால் அப்படிப்பட்ட தேசம் உருவாவதற்கும், அப்படிப்பட்ட பன்முகத்தன்மை உருவாவதற்கும் மனித குல வளர்ச்சியில் அக்கறை உள்ளோர் அனைவரும் எதிரிகளாகத்தான் இருப்பார்கள்.
பண்பாடு, பழக்கவழக்கங்களை மாற்ற முடியாது என்பதுதானே ஆகமங்கள்? இந்தப் பண்பாடு, பழக்க வழக்கங்கள் தானே இந்து லா-வில் பாதுகாக்கப்பட்டு, இன்று பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் அர்ச்சகராக நியமிக்க முடியாத நிலை நீடிக்கிறது. இந்து தேசியமோ, தமிழ்த்தேசியமோ எது வருவதானாலும் ஜாதி - அப்படியேதான் இருக்கும் என்பதைத்தான் உங்கள் அறிக்கைகள் உறுதி செய்கின்றன.
ஜனநாயகப்படுத்த வேண்டாமா?
முகநூலில் இதுபற்றிய விவாதங்கள் எழுந்தபோது, மே 17 இயக்கத்தின் சார்பாகச் சிலர் ஒரு பதிவை வெளியிட்டனர். அதாவது, கோவில்களில் தீண்டாமையும், ஜாதியும், பெண்ணடிமைத்தனமும் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் அவற்றை நன்கு அறிந்திருந்த தோழர் பெரியார், அவற்றைத் தடை செய்ய வேண்டும் என்றா கூறினார்? அவற்றை ஜனநாயகப்படுத்த முயற்சித்தார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற போராட்டம் கோவில்களை ஜனநாயகப்படுத்தும் முயற்சிதானே? என்று வாதிட்டார்கள். இளந்தமிழகமும் ஜல்லிக்கட்டை ஜனநாயகப் படுத்த வேண்டும் என்கிறது.
ஜனநாயகப்படுத்துவது என்றால், நாராயண குருவைப்போல பெரியாரும் ஆங்காங்கே சிவன்கோவிலை உருவாக்கியிருப்பார். இராமானுஜரைப் போல அனைத்து ஜாதியினருக்கும் நாமத்தைப் போட்டு விட்டிருப்பார். இதோ பெரியாரே கூறுகிறார்,
“இராமானுஜர் நாமத்தையும், பூணூலையும் பழைய சின்னம் என்பதாகக் கருதி அதை வைத்துக் கொண்டு ‘பறையன்’ என்பவர்களையெல்லாம் பிடித்து நாமமும், பூணூலும் போட்டு மக்களைச் சமத்துவம் அடையச் செய்வது என்பதான சீர்திருத்தம் செய்தார் என்பதாகச் சொல்லப்படுகின்றது. இதனால் பழைய சின்னம் காப்பாற்றப்பட்டதே தவிர, மக்களுக்கு சமத்துவம் கிடைத்ததா? சமத்துவ உணர்ச்சி உண்டாயிற்றா? நாமமும் பூணூலும் உடையவர்களுக்குள்ளாகவே உயர்வு தாழ்வும், அதுகள் இல்லாதவர்களை தாழ்மையாய்க் கருதுவதும் இன்று சூரியன் போல் துலங்குகிறது”. - குடி அரசு 02.12.28
எனவே ஜனநாயகப்படுத்துவது, சீர்திருத்துவது என்பதில் பெரியாருக்கு என்றுமே உடன்பாடில்லை. கருவறை நுழைவுக் கிளர்ச்சியில்கூட பெரியாரின் நோக்கம், முரண்பாடுகளைக் கூர்மையாக்குவது என்பதுதான். பகைமுரணை அடையாளப்படுத்துவதுதான் பெரியாரின் நோக்கம். கோவில் நுழைவில் பெரியாரின் நிலையைக் காண்போம்.
“இந்தப் பொதுக்கோவிலுக்குள் எல்லோருக்கும் செல்ல உரிமை உண்டு” என்று விளம்பரம் செய்ய வேண்டும். யாராவது ஆட்சேபித்தால் அவர்களை சிறையிலிட வேண்டும். இதை பொது ஜனங்கள் கூட்டம் போட்டு கண்டிக்க ஆரம்பித்தார்களானால் உடனே கோவிலை இடித்தெறிந்து விடவேண்டும்.
ஜாதி வித்தியாசமோ, உயர்வு தாழ்வோ கற்பிக்கின்ற புத்தகங்களைப் படிக்கக் கூடாது என்று சொல்லிவிட வேண்டும். மீறிப் படிக்க ஆரம்பித்தால் அவற்றைப் பறிமுதல் செய்ய வேண்டும். உயர்வு தாழ்வு வித்தியாசம் முதலியவை கொண்ட மடாதிபதிகளை எல்லாம் சிறையில் அடைத்துவிட வேண்டும். பொதுஜனங்கள் கிளர்ச்சி செய்தால் மடாதிபதிகளை தீவாந்திரத்திற்கு அனுப்பிவிட வேண்டும். சுவாமிகளுக்கு உள்ள நகைகள், வாகனங்கள், பூமிகள் எல்லாவற்றையும் பறிமுதல் செய்து அவைகளை விற்று படிப்பில்லாதவர்களுக்கு படிப்பும், தொழில் இல்லாதவர்களுக்கு தொழிலும் ஜீவனமும் ஏற்படுத்த உபயோகப்படுத்திவிட வேண்டும்.” குடி அரசு 09.12.1928
கோவில்களில் தீண்டாமை என்றால் அவற்றை இடித்துத் தள்ள வேண்டும், மடங்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்று முழங்கியவர் பெரியார். கிராமங்களில் ஜாதிமுறை தீவிரமாகக் கடைபிடிக்கப்படுகிறது என்பதற்காக அந்த கிராமம் என்ற முறையையே எதிர்த்தவர் பெரியார். கிராமங்கள் அழிய வேண்டும் என்றவர் பெரியார். அந்த கிராம முறையை ‘ஜனநாயகப்படுத்த வேண்டும்’ என்று ‘பூண்’ பிடித்துக் கொண்டிருக்கவில்லை.
பார்ப்பனர்களின் பண்பாட்டு விழாவான கும்பகோணம் மகாமகம் பற்றிப் பெரியார் பலமுறை தனது குடி அரசில் எழுதியுள்ளார். அந்த விழாவை ஜனநாயகப்படுத்த வேண்டும் என்று கூறவில்லை, தடை போட வேண்டும் என்றுதான் முழங்கினார்.
“இந்த சர்க்கார் மனுதர்ம, புராண ஆட்சி சர்க்காராய் இல்லாமல் இருக்குமானால் இப்படிப்பட்ட முட்டாள்தனமான காரியங்களுக்கு மக்களை ஆளாக்காமல் மாமாங்கம் நடத்தக்கூடாது என்று 144 உத்தரவு போட வேண்டும். ” - குடி அரசு - 17.02.1945
சீர்திருத்தத்தில் நம்பிக்கை அற்றவர் பெரியார். தன்னை அழிவு வேலைக்காரன் என்றுதான் அறிவித்துக்கொள்கிறார். குறிப்பாக, தற்போது உள்ள பிரச்சனை என்னவென்றால், ஜல்லிக் கட்டுக்குத் தடை அறிவிக்கப்பட்டு விட்டது. அதுபோல,
நாளையே ஒரு அறிவுள்ள அரசாங்கம் உருவாகி, “கோவில்கள் அனைத்தும் இழுத்து மூடப்படும்; தடைசெய்யப்படும்” என அறிவிக்கிறது என வைத்துக்கொள்வோம். அப்போது, கோவில்கள் என்பவை நமது பண்பாட்டின் அடையாளம், அந்தத் தடையை நீக்க வேண்டும் என எந்தப் பெரியாரியலாளரும் போராட மாட்டார்கள்.
அதுபோல இப்போது நாம் போராடாமலேயே ஜல்லிக்கட்டு என்ற ஆதிக்கப் பண்பாட்டிற்குத் தடை வந்துவிட்டது. அதை வரவேற்பதுதான் தமிழர்கள் அறிவியல் அணுகுமுறையோடு வாழ வேண்டும் என விரும்புபவர்கள் செய்ய வேண்டிய பணி.
குழந்தைத் திருமணத் தடுப்புச்சட்டம், உடன்கட்டை ஏறுதல் தடுப்புச் சட்டம், நரபலித் தடுப்புச்சட்டம் எனப்பல சட்டங்களைக் கொண்டு வந்தது இந்தியாவில் வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள்தான். இந்தத் தடுப்புச்சட்டங்கள் வருவதற்கு முன் நரபலியும், உடன்கட்டை ஏறுதலும், குழந்தை மணமும், தேவதாசிமுறையும் இந்தத் தமிழ்த்தேசத்தின் பண்பாடுகள்தான்; இந்தியப் பகுதியில் உள்ள பல தேசிய இனங்களின் பண்பாட்டு அடையாளங்கள் தான்.
ஆனால் அவற்றுக்குத் தடை வந்தபோது, அந்தத் தடைகளால் ஒருவேளை ஆங்கிலேயர்களுக்கும் பலன் இருந்திருக்கலாம். அதற்காக அந்தத் தடைகள் தவறு. அவை தேசிய இனங்களின் மீதான தாக்குதல் என்று குரல் கொடுத்தால் அது யாருக்கான குரலாக இருக்கும்? அதே போன்ற நிலையைத்தான் தற்போது மே 17, இளந்தமிழகம் இயக்கங்கள் எடுத்துள்ளன.
jallikattu 350
பூப்புனித நீராட்டு விழாவும், தாய்மாமனையே மணந்து கொள்வதும், அகமண முறையும் இதே ஜல்லிக்கட்டு கிராமங்களில் உள்ள மற்றுமொரு முக்கியமான பண்பாடுதான். எதிர்காலத்தில் ஏதோ ஒரு துணிவுள்ள அரசாங்கம் உருவாகி, இந்தப் பண்பாடுகளுக்குத் தடை விதித்தால், அந்தத் தடையை வரவேற்பதுதானே, அறிவும், மானமும் உள்ளவர்கள் செய்ய வேண்டிய செயல்? அதை விட்டுவிட்டு, ‘அகமண முறையும், பூப்புனித நீராட்டு விழாவும் எங்கள் சமுதாயத்தின் பன்முகத் தன்மையின் கூறு’ என்று அறிக்கை விட்டால் இது இளந்தமிழகமா? பழந்தமிழகமா? என்ற கேள்விதான் வரும். அந்தக் கேள்விதான் இப்போது நமக்கு எழுகிறது.
மாட்டிறைச்சி சந்தைக்கு ஜல்லிக்கட்டு எதிராக உள்ளதா?
“மாட்டிறைச்சிச் சந்தைக்கு ஜல்லிக்கட்டு எதிராக உள்ளது”, “நாட்டு மாடுகளுக்கு வெளிநாடுகளில் நல்ல சந்தை மதிப்பு இருக்கிறது. ஜல்லிக்கட்டுக்குத் தடை வந்தால் அவை இறைச்சிச் சந்தைக்கு வரும், இந்தத் தடையின் பின்னணி இதுதான்” என மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் புதிய தலைமுறையின் நேர்படப் பேசு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டின் மீதான தடையைக் கண்டித்து 13.01.2016-ல் சென்னை சாஸ்திரி பவன் அலுவலகம் மே பதினேழு இயக்க தோழர்களால் முற்றுகையிடப்பட்டது. பன்னாட்டு கார்ப்பரேட் வணிகத்திற்காக நாட்டு மாடுகளை அழிக்கவும், தற்சார்பு விவசாயத்தை அழிக்கவும், தமிழ்த்தேசிய இன மக்களின் பண்பாட்டின் மீது அடக்குமுறையாக கொண்டு வரப்பட்ட இந்தத் தடையை கண்டிப்பதற்காக இந்த முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.
ஜல்லிக்கட்டுக்காக மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுபவை காங்கேயம் காளைகள். அவைகளுக்காகவே ஒரு ஆராய்ச்சி மய்யத்தை நடத்தி வரும் காங்கேயத்தில் உள்ள, சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையப் பொறுப்பாளர் கே.எஸ்.எம்.கார்த்திகேயன் அவர்கள் 2013-ல் தினமணிக்கு அளித்த நேர்காணல் ஒன்றைப் படிப்போம்.
“காங்கயம் இனக் காளை கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம். 1990ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 11 லட்சம் மாடுகள் இருந்தன. 2000 ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 4 லட்சம் மாடுகள் இருந்தன. 2010ம் ஆண்டு கணக்கெடுப்பு நடைபெறவில்லை. கணக்கெடுப்பு நடைபெற்றிருந்தால், சுமார் 2.5 லட்சம் மாடுகள் மட்டுமே இருப்பது தெரியவரும்”. - 11.02.2013 தினமணி
1990 முதல் 2013 வரை தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு மிகச் சிறப்பாக நடைபெற்று வந்ததை நாம் அறிவோம். ஆக 2013 வரை ஜல்லிக்கட்டுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. அப்படியானால் 1990ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 11 இலட்சம் காங்கேயம் காளைகள், 2000லேயே திடீரென எப்படி 4 இலட்சம் எனக் குறைந்தது? அடுத்த பத்தாண்டுகளில் 2010ல் 2.5 இலட்சமாக எப்படிக் குறைந்தது? அப்போதெல்லாம் ஜல்லிக்கட்டு நடந்து கொண்டுதானே இருந்தது? ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் நடந்து கொண்டிருந்தபோதே இப்படி இலட்சக்கணக்கில் ஒரு இனம் அழிந்துள்ளது என்றால், காங்கேயம் காளைகள் அழிந்ததற்கு ஜல்லிக்கட்டு ஒரு காரணமாக இல்லை என்பது தெளிவாகிறது.
மேலும், நாட்டு மாடுகளுக்கு வெளிநாட்டில் இறைச்சிச் சந்தையில் நல்ல மதிப்பு இருப்பதால் ஜல்லிக்கட்டுத் தடை என்கிறார் திருமுருகன். உண்மைதான். ஆனால் அந்த மதிப்பு இந்திய நாட்டில் உள்ள நாட்டுப்பசுக்களுக்குக் கிடையாது. நாட்டு எருமைகளுக்குத் தான் மிக நல்ல இறைச்சிச்சந்தை வாய்ப்பு உள்ளது.
Agricultural and Processed Food Products Export Development Authority (APEDA) என்ற மத்திய அரசு நிறுவனத்தின் புள்ளிவிபரங்களைப் பார்க்கலாம். 2014 - 2015 ஆண்டில் 14,75,526.01 மில்லியன் டன் எருமை இறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 29,282.6 கோடி ரூபாய்க்கு வணிகம் நடந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் எருமைகள் தான் என்பதற்கும் APEDA விளக்கம் தந்துள்ளது.
இந்தியாவிலிருந்து பசு இறைச்சியை ஏற்றுமதி செய்ய அனுமதி இல்லை என்ற மாட்டிறைச்சி ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள புதுடில்லியைச் சேர்ந்த அல்நூர் நிறுவனமும் தெரிவித்துள்ளது. 30.10.2015 நாளிட்ட The Economic Times ஏட்டில் விளக்கமான செய்திகள் வெளியாகி உள்ளன.
காங்கேயம் காளை எருமை வகையில் வராது என்பது மாடு பற்றிய அடிப்படை அறிவு உள்ளவர்கள் அனைவருக்கும் தெரியும். ஜல்லிக்கட்டில் எந்த ஊரிலும் எருமைகளை அடக்குவது கிடையாது என்பது நாம் அனைவருக்கும் தெரியும்.
நாட்டு மாடுகளின் அழிவு இனிமேல் தானா?
1970லேயே நாட்டு மாடுகளுக்கு அழிவு தொடங்கிவிட்டது. அப்போது தொடங்கிய வெண்மைப்புரட்சியின் முக்கியப் பணியே நாட்டு மாடுகளை கலப்பு மாடுகளாக மாற்றி பால் உற்பத்தியைப் பெருக்கியது தான்.
National Dairy Development Board (NDDB) என்ற மத்திய அரசு நிறுவனம் வர்கீஸ் குரியன் தலைமையில் 1970 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் மிகப் பெரிய பால் பண்ணைத் திட்டத்தைத் தொடங்கியது. Ananth Milk Union Ltd ( AMUL ) என்பது அதன் வணிகப் பெயர். அத்திட்டம் தொடங்கிய பிறகு, நமது நாட்டு ‘போஸ் இண்டிகஸ்’ பசுக்களையும் வெளிநாட்டுப் பசு வகைகளான ஜெர்ஸி, ஹோல்ஸ்டின் ஃபிரீசியன், அயர்ஷயர் போன்ற பசுக்களையும் இணைத்து விவசாயிகளுக்கு இலாபகரமான கலப்பினப்பசுக்கள் உயிராக்கப்பட்டன.
அந்நிறுவனத்தின் வெற்றி, இந்தியா முழுவதிலும் கூட்டுறவுப் பால்பண்ணைகள் உருவாக வழிவகுத்தது. 01.02.1981-ல் தமிழ்நாட்டில் AAVIN ஆவின் உருவாக்கப்பட்டது. இதுபோன்ற கூட்டுறவுப் பண்ணைகளின் வளர்ச்சி நாட்டு மாடுகளை முற்று முழுதாக கலப்பின மாடுகளாக மாற்றிவிட்டன. அந்தக் கலப்பினங்கள் இந்திய நாட்டின், தமிழ்நாட்டின் வெப்ப நிலைக்குத் தன்னைத் தகவமைத்துக் கொண்டு வாழத் தொடங்கி 45 ஆண்டுகள் முடிந்து விட்டன. அவை இன்று தமிழ்நாட்டின் மாடு என்ற இனத்தின் அடையாளமாகவும், 10 கோடித் தமிழர்களுக்குப் பாலை வழங்கிக் கொண்டும் உள்ளன. இப்போது வந்து ‘நாட்டு மாடுகளைக் காப்பாற்றுவோம்’ என முழக்கம் இடுவது இந்து - பார்ப்பன நலன்களுக்குத்தான் வழிவகுக்கும்.
நாட்டு மாடுகளா? ஜாதி ஒழிப்பா? என்றால் நாம் ஜாதி ஒழிப்பு என்ற இடத்தில்தான் நிற்க வேண்டுமே தவிர நாட்டு மாடுகளைக் காக்கும் இடத்திற்குப் போவது - ஜாதி ஒழிப்பை முதன்மையாகக் கொண்டவர்கள் செய்யக்ககூடாத செயல் ஆகும்.
நாட்டு மாட்டுக்கு இன்னொரு பெயர் இருக்கிறது.....ஜாதி மாடு
இந்த நாட்டு மாடுகளுக்கு இன்னொரு பெயர் இருக்கிறது. அது தான் ‘ஜாதி மாடுகள்’ இந்த ஜாதி மாடுகளைக் காப்பாற்றத்தான் ஜாதி இந்துக்கள் போராடி வருகின்றனர். அதனால்தான் மனுவின் காலம் முதல் இந்த ஜாதி மாடுகளை தாழ்த்தப்பட்ட ஜாதிக்காரர்கள் சொந்தமாக வளர்க்க முடியாத சமுதாயச் சூழல் இருந்தது.
இந்தியாவில் மனிதர்களுக்குள் ஜாதிக்கலப்பை அனுமதிக்காதவர்கள் தான் மாடுகளுக்குள்ளும் ஜாதிக்கலப்பை அனுமதிக்காமல் - நாட்டு மாடுகளைக் காப்பாற்ற வேண்டுமெனப் போராடுகிறார்கள். அதுவும் குறிப்பாக நாட்டுப் பசுக்களைக் காப்பாற்றத்தான் பீட்டாக்களும், பார்ப்பன அமைப்புகளும், இந்து அமைப்புகளும், தமிழ்த்தேசிய அமைப்புகளும், தமிழீழத்திற்காகவே நடத்தப்படும் அமைப்புகளும் பாடுபடுகின்றன. குறைந்த விலையில் கிடைக்கும் சத்துணவான பசுமாட்டுக்கறியை உண்ணும் மக்களைப் பற்றியும் - நாட்டு எருமைகளைக் காப்பாற்றுவது குறித்தும் எவருக்கும் எந்தக் கவலையும் கிடையாது.
ஆண்டுக்கு 20 இலட்சம் டன் அளவுக்கு வெட்டிக் கொல்லப்பட்டு - ஆண்டுக்கு 30,000 கோடி ரூபாய்க்கு வணிகம் நடக்கும் எருமை இறைச்சிச் சந்தையில்தான் கார்ப்பரேட் கம்பெனிகள் வலம் வருகின்றன. அதை எதிர்த்து எவரும் பேசக்கூட இல்லை. ஆனால், உழைக்கும் மக்களுக்குச் சிறிதும் பயன்படாத - காங்கேயம் பசுக்களைக் காப்பாற்ற வேண்டுமானால் உச்சநீதிமன்றத் தடைகளை எல்லாம் மீறிக்கூடப் போராடுவார்கள்.
நாட்டுப் பசுக்களைக் காப்பாற்ற ஆர்.எஸ்.எஸ் காரர்களும், இராமகோபாலன்களும், சங்கர மடங்களும், கோசாலைகளும் இருக்கின்றன. அவர்களுக்குத் தோள் கொடுக்க - மக்கள் விடுதலை அமைப்புகளாக நாம் நம்பும் இயக்கங்கள் செல்லவேண்டாம்.

சனி, 18 ஜூன், 2016

பயணிகள் நிழற்கூடம் (ம) பேருந்து நிலையம் இல்லாத வட்டம்

பயணிகள் நிழற்கூடம் (ம) பேருந்து நிலையம் இல்லாத வட்டம் :
    
      பெரம்பலுார் மாவட்டத்தின் மிகப்பெரிய வட்டமாக திகழ்வது வேப்பந்தட்டை வட்டம். 1997 –ம் ஆண்டில் இருந்து 25 ஆண்டுகளா வேப்பந்தட்டை வட்டமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் இத்தனை ஆண்டுகள் ஆகியும் பொது மக்கள் பயன்பாட்டுக்கென்று பயணிகள் நிழற்கூடம் (ம) பேருந்து நிலையம் இல்லாத வட்டமாக திகழ்கிறது. வே. வட்டாரத்தில் 29 கிராம ஊராட்சிகளும், 2 பேரூராட்சிகளும், 4 காவல் நிலையங்களும், 1 துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகமும் , 1 அரசு மேல்நிலைப்பள்ளியும், மாவட்ட தலைமை மருத்துவமனை, சார்பதிவாளர் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. 





        வேப்பந்தட்டை வட்டாசியர் (ம) ஒன்றிய அலுவலகத்திற்கு தினந்தோறும் 5000 ஆயிரத்திற்கும் அதிகமாக பொதுமக்கள் வந்து செல்கின்றனர். நடப்பாண்டு 2016-17 ல் அரசு கலைக்கல்லுாரி (இருபாலர்) செயல்பட்டு வருகிறது. வேப்பந்தட்டை வழியாக பெரம்பலுார் – ஆத்துார் - சேலம் நெடுஞ்சாலை செல்கிறது.  நிழற்கூடம் அமைய போதுமான இட வசதிகள் இருந்தும் 25 ஆண்டுகளாக கட்டப்படவில்லை. இதனால் பயணிகளும் பொதுமக்களும் பெரிய அவதிக்குள்ளாகின்றனர். இப்பகுதி மக்கள் பேருந்து நிலையமும், காவல் நிலையமும் அமைக்க வேண்டுமென பலமுறை அரசிற்கும், அரசியல்வாதிகளுக்கும் கோரிக்கை விடுத்தும் பலனில்லை. 15 கி.மீ தொலைவில் அரும்பாவூா் நிலையமும், 10 கி.மீ தொலைவில் பெரம்பலுார் காவல் நிலையமும் உள்ளது. புறக்காவல் நிலையம் இருந்தும்  சரியாக செயல்படவில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா????? 

கோரைப்பாய் வாழ்க்கை

                         கோரைப்பாய்

வெளியில் சென்று களைத்து வீட்டுக்கு வந்ததும் பாயை விரித்து படுத்தால் கிடைக்கிற சுகமான துாக்கம் இருக்கிறதே அடடா !!!! அதற்கு ஈடு இணையேது. இந்த பாய் தாயாரிப்பில் உலக புகழ்பெற்றது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்தமடை பாய்.
     
இதற்கு அடுத்தபடியாக ஏழைகளின் மெத்தையான கோரைப்பாய் தயாரிப்பில் முன்னணியில் இருக்கிறது திருச்சி மாவட்டம் ஆமுர் கிராமம். தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலும் புகழ்ப்பெற்ற இந்தப்பாய்கள் நுாற்றாண்டு பாரம்பரியம் மிக்கதாகும். பாய் தயாரிக்கும் தொழில் பரம்பரை பரம்பரையாக அடுத்தடுத்த தலைமுறையினரால் நடத்தப்பட்டு வருகிறது. முசிறிலிருந்து – ஆமுர் வரை காவிரிக்கரையோர பகுதியில் சுமார் 1200 ஏக்கர் பரப்பளவில் கோரைப்புல் சாகுபடி செய்யப்படுகிறது.
சாகுபடி முறை :
     ஆமுர் ஸ்டாலின் அவர்கள் கூறியது-
         நிலத்தை உழுது கொண்டு கோரைக்கிழங்கை 1 அடி இடைவெளியில் ஊன்ற வேண்டும். ஒரு ஏக்கருக்கு 1500 கிழங்கு வரை தேவைப்படும். கிழங்கை தள்ளி தள்ளி ஊன்ற வேண்டும். அப்போது தான் கிழங்கு புடைதள்ளி வளரும். இரண்டு அடி வளர்ந்து பிறகு நோய் தொற்று ஏற்படாமல் மருந்து அடிக்க வேண்டும். முன்பெல்லாம் வருடத்திற்கு இரண்டு அறுவடை செய்வோம் ஆனால் இப்போது தண்ணீர் பற்றாக்குறையால் ஒரு போகம் விவசாயம் செய்வதே பெரிதான காரியம். காரணம் தண்ணீர் பற்றாக்குறைதான். வளர்ந்த கோரைப்புல் அறுவடை செய்ய 1 ஏக்கருக்கு குறைந்தது 8 நாள் தேவைப்படுகிறது. கோரைக்கு நோய் தாக்கம் உண்டு. வளர்ந்த கோரையில் நஞ்சு போன மாதிரி இருக்கும். இவை அறுவடை செய்யும் போது உதிர்ந்து போய்விடும். 1 ஏக்கருக்கு பெரிய கட்டு 4 கட்டு வரை உதிர்ந்து விடும். (மதிப்பு 5 ஆயிரம்). கோரைப்புல் அறுத்த பிறகு ஒரு ஆள் உயரஅளவு குச்சியை கொண்டு அறுக்கப்படுகிறது. அறுத்த கோரைப்புல்லை ஆற்றங்கரையோர பகுதியில் கொண்டு சென்று இயந்திரத்தின் உதவியுடன் இரண்டாக கிழிக்கப்பட்டு காய வைக்கப்படுகிறது. நல்லா காய்ந்த பிறகு தரம் பிரிக்கப்படுகிறது. கட்டு கட்டாக கட்டி பாய் நெய்வதற்கு அனுபப்படுகிறது.
     பாய் நெய்வதில் பெரும்பங்கு வகிப்பது காய்ந்த கோரைகளுக்கு சாயம் பிடிப்பது ஆகும். இச்சாயங்கள் அனைத்தும் மும்பையிலிருந்து ஏஜெண்டுகளின் உதவியுடன் வாங்கப்படுகிறது. Vilat, green, yellow, blue, rose, genthi ஆகிய 5 வகையான சாயங்கள் பயன்படுத்தப்படுகிறது. பெரிய தொட்டியில் தண்ணீர் நீரப்பி கொதிக்க வைத்து 64 சிறிய கட்டுகள் சாயம் பிடிக்கலாம். சாயம் பிடிக்கப்பட்டவை ஒரு நாள் காய வைத்து பாய் நெய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் பாய் நெய்வதற்கு நுால் வந்தவாசியிருந்தும், நரம்பு சேலம் ஓமலுார் பகுதியிருந்து மொத்தமாக வாங்கி  பயன்படுத்தப்படுகிறது.
ஆமுர் பகுதிலியிருந்து மூன்று வகையான பாய்கள் தயாரிக்கப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் பாய் சென்னை, மதுரை, நெல்லை, விருதுநகர் ஆகிய பகுதியிலிருந்து வந்து வாங்கி செல்கின்றனர்.
விவசாயிகள் கோரிக்கை :
·         மானிய விலையில் கோரை கிழிக்கும் இயந்திரம் அரசு வழங்க வேண்டும்.
·         திருவிங்கம் மலையில் கட்டிய தடுப்பணையை அகற்ற வேண்டும்.
·         ஆமுர் பகுதிக்கென்று தனி வாய்க்கால் வேண்டும்.