புதன், 24 டிசம்பர், 2014


தந்தை பெரியாரின் 41-வது நினைவு தினம்

 தந்தை பெரியார்

இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை. இவர்ஈ.வெ.ராஈ.வெ.இராமசாமி நாயக்கர் என்ற பெயர்களாலும் தந்தை பெரியார்வைக்கம் வீரர் என்ற பட்டங்களாலும் அறியப்படுகிறார்.

வாழ்க்கை வரலாறு

  • 1879 : செப்டெம்பர் 17, ஈரோட்டில் பிறந்தார். பெற்றோர்: சின்னத்தாயம்மை-வெங்கட்ட நாயக்கர்
  • 1885 : திண்ணைப்பள்ளியில் சேர்ந்தார்.
  • 1891: பள்ளிப்படிப்பை விட்டு நிறுத்தப்பட்டார்
  • 1892 : வாணிபத்தில் ஈடுபட்டார்
  • 1898 : நாகம்மையை (அகவை-13) மணந்தார்.
  • 1902 : கலப்புத்திருமணங்களை நடத்திவைத்தார். அனைத்து சமயத்தினர், சாதியினருடன் சேர்ந்து விருந்துண்டார்.
  • 1904 : ஒரு பெண் குழந்தைக்கு தந்தையானார். (அக்குழந்தை ஐந்தாம் மாதத்தில் இறந்தது. பின்னர் குழந்தையே இல்லை.)
  • 1907 : பேராய இயக்கத்தில் நாட்டம் கொண்டார். ஈரோட்டில் கக்கல் கழிச்சல் நோய் பரவியபோது, யாரும் உதவிக்கு முன்வராத நிலையில் துணிந்து மீட்புப்பணியாற்றினார்.
  • 1909 : எதிர்ப்புக்கிடையில் தங்கையின் மகளுக்கு கைம்மைத் திருமணம் செய்துவைத்தார்.
  • 1911 : தந்தையார் மறைவு
  • சுயமரியாதையாளர்கள் பிரமாணப் புரோகிதரில்லா, சமயச்சடங்கில்லா திருமணங்கள் நடைபெற வலியுறுத்தினர்
  • ஆணும், பெண்ணும் சமம், அவர்கள் வேறுபாடின்றி, சரிநிகர் சமமாக வாழும் முறையை வலியுறுத்தியது
  • சாதி மறுப்பு திருமணத்தையும் , கைம்பெண் திருமணத்தையும் ஊக்கப்படுத்தியது.
  • அளவில்லா குழந்தைகள் பெறுவதைத் தடுத்து குடும்பக் கட்டுபாட்டை 1920 களிலேயே வலியுறுத்தியது
  • கோயில்களில் சட்டத்திற்குப் புறம்பாக பின்பற்றப்படும் தேவதாசி முறையையும் (பெண்களைக் கோயில் தாசிகளாக, பொது மகளிராக ஆக்கி அடிமைப்படுத்தும் முறை), குழந்தைத் திருமணத்தையும் தடை செய்தது
  • இதனினும் முக்கிய கொள்கையாக அரசு நிருவாகப் பணி, கல்வி இவற்றில் இடவொதுக்கீடு முறையைக் கடைப்பிடிக்க மதராஸ் அரசு நிருவாகத்தை (தமிழ்நாடு உட்பட) 1928 லேயே வலியுறுத்தியது.

பொள்ளாச்சி சிறுமிகள் பாலியல் 


வன்கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு 


இரட்டை ஆயுள் தண்டனை






  

பொள்ளாச்சி தனியார் விடுதியில், 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி சுப்ரமண்யன் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

வால்பாறையைச் சேர்ந்த வீராச்சாமி என்பவர், அத்துமீறல், ஆள் கடத்தல், கொலை மிரட்டல் ஆகிய 3 பிரிவுகளில் குற்றவாளி என தீர்ப்பளித்து, மொத்தம் 44 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமைக்கு ஆயுள் தண்டனை என்ற வகையில், 2 சிறுமிகளை வன்கொடுமை செய்ததற்கு, இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா இரண்டரை லட்ச ரூபாயை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும், இருவருக்கும் கல்வி, வேலை வாய்ப்பையும் அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜூன் மாதம், பொள்ளாச்சியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த 2 மாணவிகள் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆறே மாதங்களில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
.

செவ்வாய், 23 டிசம்பர், 2014



சென்னை: நாடக இயக்குநர், திரைப்பட இயக்குநர், நடிகர், கதாயாசிரியர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி சீரியல் இயக்குநர் என பன்முக திறமை கொண்டவர் கே.பாலச்சந்தர். "இயக்குநர் சிகரம்' மற்றும் "தமிழ் சினிமாவின் பீஷ்மர்' என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். தமிழ் திரையுலக வரலாற்றில் தனி இடம் பிடித்த இவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார்

1930 ஜூலை 9ம் தேதி திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி என்ற கிராமத்தில், சினிமாவுக்கு தொடர்பில்லாத குடும்பத்தில் பிறந்தார். தந்தை கைலாசம், தாயார் காமாட்சியம்மாள். நன்னிலத்தில் பள்ளியில் படிக்கும் போதே நாடகம் மற்றும் சினிமா மீது விருப்பம் கொண்டார். நண்பர்களை வைத்து திண்ணை நாடகங்களை நடத்தினார். 
அப்போதைய தமிழ் சினிமாவின் "சூப்பர் ஸ்டாராக' விளங்கிய தியாகராஜ பாகவதரின் படங்களால் ஈர்க்கப்பட்டார். 12 வயதிலேயே சினிமா மற்றும் நாடகங்களுக்கு அடிக்கடி சென்றார். இதன் மூலம் அவர் மனதில் சினிமா ஆசை வளரத் தொடங்கியது. பின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., (விலங்கியல்) படிப்பில் சேர்ந்தார். கல்லூரியில் படிக்கும் போதும் கதை எழுதுவது, நாடகங்களில் நடிப்பது போன்ற திறமைகளை வளர்த்துக் கொண்டார். கல்லூரிகளில் விழா என்றால் அதில் பாலசந்தரின் நாடகம் கண்டிப்பாக இடம்பெறும். 1949ல் பட்டப்படிப்பை முடித்ததும், முத்துப்பேட்டையில் உள்ள பள்ளியில் ஓராண்டு ஆசிரியராக பணியாற்றினார். அங்கும் மாணவர்களை வைத்து நாடகம் நடத்துவார். 1950ல் சென்னை வந்தார். அங்கு மத்திய அரசின் அக்கவுண்டண்ட் ஜென்ரல் அலுவலகத்தில் கிளார்க் பணியில் சேர்ந்தார். அங்கு இருக்கும்போதே கிடைக்கும் நேரத்தில் நாடக கம்பெனியில் சேர்ந்து நாடகம் இயக்கும் திறமையை வளர்த்துக்கொண்டார். ஆங்கிலத்தில் வெளியான "மேஜர் சந்திரகாந்த்' என்ற நாடகத்தை தமிழில் மொழி பெயர்த்து இயக்கினார். இந்நாடகம் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் பின் நீர்க்குமிழி, சர்வர் சுந்தரம், மெழுகுவர்த்தி, நாணல், நவக்கிரகம் உள்ளிட்ட நாடகங்களையும் இயக்கினார். 

சினிமாவில் தடம்: வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, 1965ல் எம்.ஜி.ஆர்., நடிக்கும் தெய்வத்தாய் என்ற படத்துக்கு வசனம் எழுத வாய்ப்பு வந்தது. முதலில் தயங்கிய இவர், பின் சம்மதித்தார். இதன்பின் சர்வர் சுந்தரம் படத்துக்கு வசனம் எழுதினார். அதே ஆண்டு 1965ல் நீர்க்குமிழி என்ற திரைப்படத்தில் முதன்முதலாக இயக்குநராக அறிமுகமானார். நடிகர் நாகேஷ் கதாநாயகனாக நடித்தார். இவருடைய பெரும்பாலான படங்களில், குடும்பு உறவுகளுக்கு இடையேயான பிரச்னை, சமூகப் பிரச்சினைகள் ஆகியவை மையக்கருத்தாக அமைந்தன. இதன் பின் பல படங்களை இயக்கினார். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் நீர்க்குமிழி, மேஜர் சந்திரகாந்த், இரு கோடுகள், பூவா தலையா, பாமா விஜயம், தாமரை நெஞ்சம், நான் அவனில்லை, புன்னகை, எதிர் நீச்சல், சிந்து பைரவி, அபூர்வ ராகங்கள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, அக்னிசாட்சி, வறுமையின் நிறம் சிகப்பு, புதுப்புது அர்த்தங்கள், வானமே எல்லை, ஜாதிமல்லி, நூற்றுக்கு நூறு, கல்கி, பார்த்தாலே பரவசம் உள்ளிட்ட படங்கள் சிறந்த படங்களாக அமைந்தன. 

தயாரிப்பு நிறுவனம்:1981ல் "கவிதாலயா" என்னும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார். இதன் மூலமாக பிற இயக்குனர்களின் கைவண்ணத்தில் பல திரைப்படங்களை அளித்தார். வெற்றிப்படங்களான அச்சமில்லை அச்சமில்லை, சிந்து பைரவி உள்ளிட்ட 56 திரைப்படங்களை தயாரித்துள்ளார். 

இவரால் உருவான நடிகர்கள்:தமிழ்த் திரையுலகில் இன்று முன்னணி நடிகராக விளங்கும் ரஜினியை 1975ல் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் பாலச்சந்தர். அதே போல நடிகர் கமலஹாசன் ஏற்கனவே அறிமுகமாகியிருந்தாலும், பாலசந்தரின் அதிக படங்களில் நடித்துள்ளார். சிரஞ்சீவி, ராதாரவி, நாசர், பிரகாஷ்ராஜ், பூர்ணம் விஸ்வநாதன், சரத்பாபு, சார்லி, விவேக், எஸ்.பி.பி. என இவர் அறிமுகப்படுத்திய நடிகர்கள் ஏராளம். இன்னமும் இவரைக் கண்டாலே எழுந்து நின்றுவிடுவார் ரஜினி.

இவரால் வந்த நடிகைகள்: ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா, சரிதா, சுஜாதா, ஸ்ரீப்ரியா, ஜெயசுதா, ஜெயசித்ரா, கீதா, ஸ்ரீவித்யா, சுமித்ரா, ஜெயந்தி, மதுபாலா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல நடிகைகளை அறிமுகப்படுத்தினார். 

புதுமுக நடிகர்கள் படம்:அவள் ஒரு தொடர்கதை போன்ற சில திரைப்படங்களை முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்தே இயக்கியிருந்தார். ஜெயலட்சுமி, ஸ்ரீபிரியா, விஜயகுமார், ஜெய்கணேஷ் ஆகியோர் அறிமுகமான இப்படம் ஒரு வெற்றிப்படமாகவும் அமைந்தது. பட்டினப்பிரவேசம் திரைப்படத்திலும், டெல்லி கணேஷ், சிவச்சந்திரன் போன்றோரை அறிமுகம் செய்தார். இதுவும் வெற்றிப்படமே.

பிறமொழி நடிகர்கள்:பிற மொழியிலிருந்தும் சிலரை தமிழில் அறிமுகப்படுத்திய பெருமையும் இவருக்கு உண்டு. அவர்களுள் சுஜாதா (அவள் ஒரு தொடர்கதை), ஷோபா (நிழல் நிஜமாகிறது), சரத்பாபு (நிழல் நிஜமாகிறது), சரிதா (தப்புத்தாளங்கள்), பிரகாஷ்ராஜ் (கல்கி) ஆகியோர் அடங்குவர்.

செஞ்சுரி:இதுவரை 101 படங்கள் இயக்கியுள்ளார். முதல்படம்: நீர்க்குமிழி; நூறாவது படம்: பார்த்தாலே பரவசம்; கடைசிப் படம்: பொய்.

நாடகத்திலிருந்து சினிமாவுக்கு...:எஸ். வி.சேகர் (வறுமையின் நிறம் சிகப்பு), மவுலி (நிழல் நிஜமாகிறது) ஒய். ஜி.மகேந்திரன் (நவக்கிரகம்) மற்றும் காத்தாடி ராமமூர்த்தி (பட்டினப்பிரவேசம்) என, முன்னரே நாடக மேடையில் புகழ் பெற்றிருந்த சிலரை சினிமாவுக்கு அழைத்து வந்தார். 

நடிகராக அவதாரம்:கல்கி, பொய், ரெட்டைச்சுழி, நினைத்தது யாரோ, உத்தம வில்லன் போன்ற படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். 

ரஜினிக்கு பிடித்த படம்:பாலச்சந்தர் இயக்கிய படங்களில் அவள் ஒரு தொடர்கதை, அரங்கேற்றம் ஆகிய 2 படங்களும் ரஜினிக்கு பிடித்த படங்கள். 

நிறைவேறாத கனவு:தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்களாக திகழும் ரஜினி - கமல் இருவரும் இணைந்து கடைசியாக நடித்த படம், 1979ல் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான "நினைத்தாலே இனிக்கும்' திரைப்படம். 35 ஆண்டுகளுக்குப் பின் இருவரையும் வைத்து ஒரு திரைப்படம் இயக்குவதற்கு பாலச்சந்தர் திட்டமிட்டிருந்தார். அது நடக்கவில்லை என்பது தமிழ் ரசிகர்களுக்கு ஏமாற்றமே. பாலச்சந்தர், வெளிநாட்டில் படப்பிடிப்பை நடத்திய முதல் படமும் இதுவே.

யாருக்கு அதிக வாய்ப்பு:* தனது இயக்கத்தில் பாலச்சந்தர் அதிகமாகப் பயன்படுத்திய நடிகர்கள் ஜெமினி கணேசன், நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், கமலஹாசன், முத்துராமன் ஆகியோர். நாகேஷ் இவருக்கு விருப்பமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர். நடிகைகளில் சவுகார் ஜானகி, ஜெயந்தி, சுஜாதா, சரிதா ஆகியோரைக் குறிப்பிடலாம்.
* சக இயக்குநர்கள் மற்றும் தனக்கு பின் வந்த இயக்குநர்கள் யாராக இருந்தாலும், சிறந்த படம் கொடுப்பவர்களை தயங்காமல் பாராட்டி விடுவார். 
* சிவாஜியை வைத்து பாலச்சந்தர் இயக்கிய ஒரே படம் எதிரொலி. 1971ல் இப்படம் வெளியானது. 
* பாலச்சந்தர் இயக்கிய முதல் வண்ண திரைப்படம் நான்கு சுவர்கள். ரவிச்சந்திரன் மற்றும் ஜெய்சங்கர் நடித்து 1971ல் வெளியானது. இவர் இயக்கிய கடைசி கருப்பு வெள்ளை திரைப்படம் நிழல் நிஜமாகிறது. 
* துவக்க காலத்தில் நாடக பாணியிலான திரைப்படங்களை (மேஜர் சந்திரகாந்த், நீர்க்குமிழி, தாமரை நெஞ்சம்) இயக்கிய பாலச்சந்தர், நகைச்சுவையில் தனது முத்திரையைப் பதித்த படங்கள், அனுபவி ராஜா அனுபவி, பூவா தலையா, பாமா விஜயம் போன்றவை. இதன் பின் இவர் இயக்கிய நகைச்சுவைப் படங்களான தில்லு முல்லு, பொய்க்கால் குதிரை சிறந்த வெற்றியை பெற்றன. 
* நூறு படங்களுக்கும் மேலாக இயக்குனராகப் பணியாற்றி இருந்தாலும், எம்.ஜி.ஆரை பாலச்சந்தர் இயக்கியதே இல்லை. அவரது ஒரே ஒரு படத்துக்கு (தெய்வத்தாய்) வசனம் மட்டும் எழுதினார். 
* பாலச்சந்தரின் இயக்கத்தில் சிந்து பைரவி படத்தில் தனது பாத்திரத்திற்காக, சுஹாசினி இந்திய அளவில் சிறந்த நடிகை விருது பெற்றார். இளையராஜாவிற்கும் சிறந்த இசையமைப்பாளர் விருதை ஈட்டித் தந்த படம் இது.
* பாலச்சந்தரின் இயக்கத்தில் ஜெயலலிதா நடித்த ஒரே படம் மேஜர் சந்திரகாந்த்.
* ஒருமுறை "பெப்சி' தலைவராக இருந்திருக்கிறார். 

இந்தி படங்கள்:ஏக் துஜே கேலியே, ஜரா சி ஜிந்தகி, ஏக் நயீ பஹேலி போன்ற படங்களை இந்தியில் இயக்கியுள்ளார். 

நான்கு மொழி:தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் திரைப்படங்களை இயக்கியவர். 

டிவி தொடர்கள்:தூர்தர்ஷனில் 1990ல் வெளிவந்த இவரது "ரயில் சிநேகம்' இன்றளவும் பேசப்படும் தொடர். கையளவு மனசு, காசளவு நேசம், காமடி காலனி, ரகுவம்சம், அண்ணி போன்ற15க்கும் மேற்பட்ட "டிவி' சீரியல்களை இயக்கினார். பின்னாளில் வெளிவந்த மெகா சீரியல்களுக்கு இவர்தான் வழிகாட்டி. 

8 தேசிய விருது:இவர் இயக்கிய மற்றும் தயாரித்த இரு கோடுகள், அபூர்வ ராகங்கள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, ருத்ரவீணா, ஒரு வீடு ஒரு வாசல், ரோஜா ஆகிய படங்களுக்கு மொத்தம் 8 தேசிய விருதுகள் கிடைத்தன. 

விருதுகள்:1968 - 1993 - தமிழக அரசு விருது
1973ல் - கலைமாமணி விருது
1974 - 1994 - 12 முறை பிலிம்பேர் விருது (சவுத்)
1976 - 1982 - நந்தி விருது
1981ல் - பிலிம்பேர் விருது
1987ல் - மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது
1992ல் - அறிஞர் அண்ணா விருது
2008 - 39வது சர்வதேச திரைப்படவிழாவில் "வாழ்நாள் சாதனையாளர் விருது'
2011ல் - தாதா சாகிப் பால்கே விருது. 
கவுரவ டாக்டர் பட்டங்கள் - 3 பல்கலை

பாலச்சந்தர் இயக்கிய திரைப்படங்கள்:
01.நீர்க்குமிளி
02.நாணல்
03.மேஜர் சந்திரகாந்த்
04.பாமா விஜயம்
05.அனுபவி ராஜா அனுபவி
06.எதிர் நீச்சல் 
07. தாமரை நெஞ்சம்
08.பலே கொடலு
09. பூவா தலையா
10.சட்டெகலப்பு சடேயா
11.இரு கோடுகள்
12. பத்தாம்பசலி
13.எதிரொலி
14.நவகிரகம்
15.காவிய தலைவி
16. நான்கு சுவர்கள்
17.நூற்றுக்கு நூறு
18.பொம்மா பொருசு
19.புன்னகை
20.கண்ணா நலமா
21. டெள்ளக டகழா
22.அரங்கேற்றம்
23.சொல்லத்தான் நினைக்கிறேன்
24. அவள் ஒரு தொடர்கதை
25. நான் அவனில்லை
26. அபூர்வ ராகங்கள்
27.மன்மதநீலை
28.அந்துலாணி கதா
29. மூன்று முடிச்சு
30.அவர்கள்
31. பட்டின பரவசம்
32. அயினா
33. நிழல்நிஜமாகிறது
34.மாரோ சரிதரா
35. தப்பு தாளங்கள்
36. தப்பிடா தலா
37. நினைத்தாலே இனிக்கும்
38.அந்தமானிய அனுபவம்
39. நூல் வெலி
40. குப்பெடு மனசு
41.இடி கதா காடு
42.கழகன்
43.வறுமையின் நிறம் சிவப்பு
44. அகாலி ராஜ்யம்
45. அடவாலு மீகு ஜோகர்லு
46.எங்க ஊர் கண்ணகி
47. தொலிகோடி கூடிண்டி
48. தில்லு முல்லு
49. தண்ணீர் தண்ணீர்
50. எத் துஜே கே லியே
51.47 நாட்கள்
52. 47 ரோஜூலு
53.அக்னி சாட்சி
54. பெங்கியாழி அரலிடா ஹூவு
55. பொய்காலி குதிரி
56.ஜாரா சி ஜிங்காடி
57. கோகிலம்மா
58. எக் நாய் பகலி
59.அச்சமில்லை அச்சமில்லை
60. ஈரஐ ரேகேகலு
61. கல்யாண அகதிகள்
62.சிந்து பைரவி
63. முகிலே மலிகே
64. சுந்தர ஸ்வாப்நகலு
65. புன்னகை மன்னன்
66. மனதில் உறுதி வேண்டும்
67. ருத்ரவேணா
68. உன்னால் முடியும் தம்பி
69.புது புது அர்த்தங்கள்
70.ஒரு வீடு இரு வாசல்
71.அழகன்
72. அழகன்
73. வானமே இல்லை
74. திலோன் கா ரிஷ்தா
75. ஜாதி மல்லி
76. டூயட்
77.கல்கி
78. பார்த்தாலே பரவசம்
79. பொய்

வெள்ளி, 19 டிசம்பர், 2014

*உலகப்புகழ் பெற்ற மோனாலிசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.


*தேசியக்கொடியை முதன்முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க். ஆண்டு 1219.

*கத்தரிக்காயின் தாயகம் இந்தியா.


*வெண்மை என்பது நிறம் இல்லை. அது ஏழு வண்ணங்களின் கலவையே.



*உலகில் 44 நாடுகளுக்கு கடற்கரை இல்லை.



*இந்தியாவில் தமிழில்தான் ‘பைபிள்’ முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.



*எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் விலங்கு, நாய்.



*இறாலின் இதயம் தலையில் இருக்கிறது.



*ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ. நீள கோடு போடலாம்.

புதன், 17 டிசம்பர், 2014


சென்செக்ஸ் 71 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு
 
 நாள் - டிசம்பர் 17, 2014, 

பங்குச் சந்தைகள் தொடர்ந்து ஐந்தாவது வர்த்தக தினங்களாக இன்றும் வர்த்தகத்தை இறக்கத்துடன் முடித்தன. இன்றைய வர்த்தகத்தில், சுகாதாரம், கட்டுமானம், வாகனம், வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகிய துறைப் பங்குகள் விலை குறைந்து முடிந்தன. ஆனால் உலோகம், எண்ணெய், எரிசக்தி, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து காணப்பட்டன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 71 புள்ளிகள் சரிந்து 26 ஆயிரத்து 710 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டியும் 37 புள்ளிகள் இறங்கி 8 ஆயிரத்து 29 புள்ளிகளில் முடிவடைந்தது.

ரிசர்வ் வங்கியின் அன்னிய செலாவணி மதிப்பு நிர்ணய அடிப்படையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63 ரூபாய் 58 காசாக உள்ளது. ஐரோப்பிய யூரோ மதிப்பு 79 ரூபாய் 39 காசாக இருக்கிறது. இங்கிலாந்தின் பவுண்ட் மதிப்பு 99 ரூபாய் 98 காசாக உள்ள நிலையில், ஜப்பானின் 100 யென்னுக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 54 ரூபாய் 34 காசாக இருக்கிறது
.