தந்தை பெரியாரின் 41-வது நினைவு தினம்
தந்தை பெரியார்
வாழ்க்கை வரலாறு
- 1879 : செப்டெம்பர் 17, ஈரோட்டில் பிறந்தார். பெற்றோர்: சின்னத்தாயம்மை-வெங்கட்ட நாயக்கர்
- 1885 : திண்ணைப்பள்ளியில் சேர்ந்தார்.
- 1891: பள்ளிப்படிப்பை விட்டு நிறுத்தப்பட்டார்
- 1892 : வாணிபத்தில் ஈடுபட்டார்
- 1898 : நாகம்மையை (அகவை-13) மணந்தார்.
- 1902 : கலப்புத்திருமணங்களை நடத்திவைத்தார். அனைத்து சமயத்தினர், சாதியினருடன் சேர்ந்து விருந்துண்டார்.
- 1904 : ஒரு பெண் குழந்தைக்கு தந்தையானார். (அக்குழந்தை ஐந்தாம் மாதத்தில் இறந்தது. பின்னர் குழந்தையே இல்லை.)
- 1907 : பேராய இயக்கத்தில் நாட்டம் கொண்டார். ஈரோட்டில் கக்கல் கழிச்சல் நோய் பரவியபோது, யாரும் உதவிக்கு முன்வராத நிலையில் துணிந்து மீட்புப்பணியாற்றினார்.
- 1909 : எதிர்ப்புக்கிடையில் தங்கையின் மகளுக்கு கைம்மைத் திருமணம் செய்துவைத்தார்.
- 1911 : தந்தையார் மறைவு
- சுயமரியாதையாளர்கள் பிரமாணப் புரோகிதரில்லா, சமயச்சடங்கில்லா திருமணங்கள் நடைபெற வலியுறுத்தினர்
- ஆணும், பெண்ணும் சமம், அவர்கள் வேறுபாடின்றி, சரிநிகர் சமமாக வாழும் முறையை வலியுறுத்தியது
- சாதி மறுப்பு திருமணத்தையும் , கைம்பெண் திருமணத்தையும் ஊக்கப்படுத்தியது.
- அளவில்லா குழந்தைகள் பெறுவதைத் தடுத்து குடும்பக் கட்டுபாட்டை 1920 களிலேயே வலியுறுத்தியது
- கோயில்களில் சட்டத்திற்குப் புறம்பாக பின்பற்றப்படும் தேவதாசி முறையையும் (பெண்களைக் கோயில் தாசிகளாக, பொது மகளிராக ஆக்கி அடிமைப்படுத்தும் முறை), குழந்தைத் திருமணத்தையும் தடை செய்தது
- இதனினும் முக்கிய கொள்கையாக அரசு நிருவாகப் பணி, கல்வி இவற்றில் இடவொதுக்கீடு முறையைக் கடைப்பிடிக்க மதராஸ் அரசு நிருவாகத்தை (தமிழ்நாடு உட்பட) 1928 லேயே வலியுறுத்தியது.