செவ்வாய், 31 மார்ச், 2015

பெரம்பலூர் மாவட்ட வரலாறு

பெரம்பலூர் மாவட்டம் 30-09-1995 ஆம் ஆண்டு தமிழக அரசால் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. பெரம்பலூர் வடக்கே கடலூரையும் தெற்கே திருச்சிராப்பள்ளியையும் கிழக்கே தஞ்சாவூரையும் மேற்கே சேலத்தையும் தனது எல்லையாகக் கொண்டுள்ளது.

1741ஆம் ஆண்டு மராட்டியர்கள் திருச்சியைத் தங்கள் வசப்படுத்திக் கொண்டார்கள். அப்போது சந்தா சாஹிப் இந்தப்ப பகுதியை ஆண்டுக் கொண்டிருந்தார். பிறகு 1748 ஆம் ஆண்டு சந்தா சாஹிபிடமிருந்து ஆற்காடு நவாப் இந்தப்பகுதியை தனது வசமாக்கிக் கொண்டார்.

ஆற்காடு நவாபிடமிருந்து முஹம்மதலி வசப்படுத்தி தன்னுடைய ஆட்சிப்பகுதிகளில் பல பாளையங்களாகப் பிரித்து ஆட்சிப்புரிந்து வந்தார். இதில உடையார்பாளையம், அரியலூர் ஆகியவையும் அடங்கும். உடையார்பாளையம் பகுதியிலிருந்த இளம்புலிகார்கள் ஒன்று சேர்ந்து உடையார் பாளையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு ஆற்காடு நவாபின் படைகள் மீண்டும் உடையார்பாளையத்தை தங்கள் வசப்படுத்திக்கொண்டனர். அப்போது போரில் தோல்விக் கண்ட புலிகார்கள் தரங்கம்பாடிக்கு அகதிகளாக சென்றனர். அங்கு அவர்கள் டச்சுக் காரர்களின் உதவியுடன் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தினர். இதன்மூலம் உடையார்பாளையத்தின் வழியாக ஆற்காட்டிற்கும் திருச்சிக்கும் இடையே தடையில்லாதப் போக்குவரத்து பெரம்பலூர் வழியாக ஆற்காடு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த வரலாறானது பல்வேறு பெரும் போர்களுடன் தொடர்ந்தது. ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் காலத்திலும் பிரிட்டிஷ்காரர்களுடன் தொடர்ந்து இப்பகுதிக்காக போர் நடைபெற்றது. இறுதியாக திப்புசுல்தான் இறந்தபிறகு பெரம்பலூர் பகுதியை தங்கள் கட்டுப் பாட்டுக்குள் 1801ஆம் ஆண்டு கொண்டு வந்தனர்.





இந்திய விடுதலைக்குப்பிறகு 1995 ஆம்ஆண்டு திருச்சி மாவட்டம் 3 மாவட்டங்களாகப் பிரிக்கப்ட்டு பெரம்பலூர் மற்றும் கரூர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. திரு.நந்தகிஷோர் I.A.S அவர்கள் பெரம்பலூர் மாவட்ட முதல் மாவட்ட ஆட்சித்தலைவராக நியமிக்கப்பட்டார்.
பெரம்பலூர் மாவட்டம் 2001 ஆம் ஆண்டு மேலும் இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் உருவானது. 2001 கணக்கெடுப்;பின் படி அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் 11,89,170 சதுர அடி நிலப்பரப்;பினை உடையது. ஒரு சதுர கி.மீ.ல் 322 மக்கள் வாழ்கின்றனர். பெரம்பலூர் மாவட்டம் தமிழ்நாட்டின் மையப்பகுதியில் உள்ளது. சென்னையிலிருந்து தெற்கே 267 கி.மீ. தொலைவில் உள்ளது. இம்மாவட்டத்தின் சுற்றளவு 361 சதுர கி.மீ.

இது கடற்கரை இல்லாத மாவட்டம். இந்த மாவட்டத்தின் வடக்கே வெள்ளாறும் தெற்கே கொள்ளிடம் ஆறும் பாய்கிறது. பச்சை மலை இந்த மாவட்டத்தில் உள்ள முக்கிய மலைப்பகுதியாகும்.

கனிமங்களும் தாதுக்களும்

இந்த மாவட்டத்தில் சுண்ணாம்புக் கற்கள், பாஸ்பேட் போன்ற தாதுக்கள் அதிகமாகக் கிடைக்கின்றன. கட்டடிங்கள் கட்டுவதற்குத் தேவையான கற்கள் பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை பகுதிகளில் அதிகமாகக் கிடைக்கிறது

சனி, 28 மார்ச், 2015

பெரம்பலுார்-பச்சைமலை

தமிழகத்தில் காணப்படும் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் தொடர்களான சவ்வாது மலை,  கல்வராயன் மலை மற்றும் சேர்வராயன் மலை ஆகிய தொடரில் பச்சைமலையும் ஒன்று.

 பச்சைமலை 527.61 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. கடல் மட்டத்தில் இருந்து 160 முதல் 1072 உயரம் உள்ள இந்த மலையில் அரியவகை மரங்களும், செடிகளும் மற்றும் கொடிகளும் நிறைந்து காணப்படுகின்றன. பச்சைமலை வனப்பகுதியில் உள்ள அடர்ந்த காடுகள் தமிழகத்தின் ஆக்ஸிஜன் உற்பத்தி கூடமாக விளங்குகிறது.இந்த மலைபகுதியின் பழங்குடியினர்கள் என அழைக்கப்படுகின்ற ஆதிதிராவிடர்கள் கணிசமான அளவு வாழ்ந்து வருகின்றனர்.


இம்மலையில் 35 காப்பு காடுகள் 19,075 ஹெக்டேர் பரப்பளவில் உள்ளது.
பச்சைமலையில் உற்பத்தியாகி வரும் ஆறுகளில் கல்லாறும் ஒன்று. 
இந்த மலையில் இருந்து விழும் மயிலூற்று அருவி பெரம்பலூர் மாவட்டத்தின் சுற்றுலா தளங்களில் ஒன்றாகவும் உள்ளது.  திருச்சி பெரம்பலூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் பரந்து விரிந்துள்ள பச்சைமலையின் பகுதிகளுக்கு செல்ல திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. இத்தகைய சிறப்பு வாய்ந்த பச்சைமலையில் மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகைகள் இன்றும் நிறைந்து காணப்படுகின்றன.

விசுவக்குடி தடுப்பணை

கல்லாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் விசுவக்குடி அணையின், உட்புறமுள்ள மேடுகளை அகற்றி, ஆழப்படுத்தி, மேலும் 10 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.  பெரம்பலூர் மாவட் டம், பசும்பலுார் அருகில் விசுவக்குடி அருகே செம்மலை, பச்சை மலை ஆகியவற்றின் இடையே, கல்லாற் றின் குறுக்கே ரூ.19 கோடி மதிப் பீட்டில் புதிய அணை கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் ஆறு மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டு தற்போது முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   கலெக்டர் தரேஸ் அஹமது மேற்பார்வையில், பொதுப்பணித்துறையின ரால் நடந்து வரும் விசுவக் குடி அணைக்கட்டில் 30.67மில்லியன் கனஅடி தண்ணீரை தேக்குவதற்கு ஏதுவாக அதன் கட்டமைப்பு அமைக்கப்பட்டு வருகிறது.
இதில் கட்டப்படும் இர ண்டு மதகுகள் மூலம் விசுவக்குடி, தொண்டமாந்துறை, V.களத்தூர், பசும்பலுார் ஆகிய கிராமங்களைச் சார்ந்துள்ள 859 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். இதன் மூலம் 423 ஏக்கர் பரப்பளவில் விவசாயத்திற்கு தேவையான நீர் தேவை உறுதி செய்யப்பட்டுள் ளது. மேலும் கிணற்று பாசனம் பெறக்கூடிய பகுதி 168.50 ஏக்கராக       அதிகரிக்கும். தற்போது கான்கிரீட் கலுங்குகள் அமைக் கும் பணி நடந்து வருகிறது. 2ஆண்டு ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்டு விரை ந்து நடைபெற்று வரும் இப்பணி 2014 செப்டம்பரில் முடிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அணைக்கட்டு நடுவேயும், தண்ணீர் வரும் வழியிலும் இயற்கையாக அமைந்துள்ள மிகப்பெரிய மேடுகள் உள்ளன. இந்த மேடுகளை அகற்றி, திட்டப்பணிகள் நடைபெற்று வரும் வழியாக அவற்றை வெளியேற்றி, நீர்ப்பிடிப்பு பகுதியை ஆழப்படுத்த வேண்டும். இதனால் திட்டத்தின் முழு கொள்ளளவான 30.67 மில்லியன் கனஅடி தண்ணீரைப் பெறுவதோடு, மேலும் 10 மில்லியன் கன அடி தண்ணீரை கூடுதலாக தேக்கி வைக்க முடியும். இதன்மூலம் கூடுதலான நீர்ப்பிடிப்பை உருவாக்க முடியும். இவற்றால் பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு தேவையான குடிநீரையும், பாசனத்திற்கு தேவையான தண்ணீரையும் பெற முடியும்.

வெள்ளி, 27 மார்ச், 2015

நகை கலாசாரம்

ழகுக்காக நகை அணியும் நாகரிக பழக்கம் எப்போது தோன்றியிருக்கும்? என்று சிந்தித்தால் சுமார் 2000 ஆண்டுகள் என்று நாம் உத்தேசமாக கூறுவோம். ஆனால் அது உண்மையல்ல. மனிதன் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நகையை விரும்பி அணிவதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 
விலங்குகளோடு, விலங்காக நாகரிக வளர்ச்சியற்று திரிந்த நியாண்டர்தால் மனிதக் கூட்டமே நகை அணியும் பழக்கம் கொண்டிருந்ததாக புதிய ஆராய்ச்சியில் தெரியவந்தது. குரோஷியாவின் நியாண்டர்தால் குகைகளில் கண்டுபிடிக்கப்பட்ட கழுகுகளின் அலகுகள், நகங்களை ஆய்வு செய்தபோது இதை கண்டுபிடித்தனர். நியாண்டர்தால் மனிதர்கள், விலங்குகள் மற்றும் பறவைகளின் எலும்புகள், நகங்கள், அலகுகளை நெக்லஸ் மற்றும் பிரேஸ்லெட் போல கழுத்திலும், கைகளிலும் அணிந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. எனவே ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் நகை அணியும் கலாசாரத்தை கொண்டிருந்தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள். கன்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர் டேவிட் பிரேயர் மற்றும் குழுவினர் இதை கண்டுபிடித்துள்ளனர்.

புதன், 25 மார்ச், 2015

நூலகங்களின் அவல நிலை!

பணம் கொடுத்து நூல்களை வாங்கிப் படிக்கும் வசதியில்லாத கிராமப்புற ஏழை மக்கள், புதிய நூல்களை வாசிக்கச் செல்லும் ஒரே இடம், உள்ளூர் கிளை நூலகங்கள்தான். தமிழ்நாட்டில் சுமார் 4,000 கிளை நூலகங்கள் பொது நூலகத் துறையின் கீழ் பேருக்காகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அடிப்படை வசதிகள் இல்லாமல், நூலகர்கள் இல்லாமல், புதிய நூல்கள் வாங்காமல், அமர்ந்து படிக்க இருக்கை வசதிகளும், போதிய இடமும் இல்லாமல் சீர்கெட்டுச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ரூ.60 லட்சத்திற்குமேல் செலவு செய்து புதுப்பிக்கப்பட்ட "தேவநேயப் பாவாணர் நூலக அரங்கம்' இப்போது எந்த நிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதி தராமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பொது நூலகத் துறையின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி முடிய "தேசிய நூலக வார விழா' - நூலகர் தினம், எழுத்தாளர் தினம், பதிப்பாளர் தினம், மகளிர் தினம், வாசகர் தினம், மாணவர்கள் தினம், சிறந்த நூலகர்கள் விருது வழங்கும் தினம் என ஏழு நாள்கள் சிறப்பாக நடைபெறும். ஆனால் இன்று, "நூலக வார விழா' கொண்டாடுவது அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள நான்கு பல்கலைக்கழகங்கள் நடத்தும் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பல்லாயிரக்கணக்கானவர்கள் - நூலகவியலில் பி.எல்.ஐ.எஸ்., எம்.எல்.ஐ.எஸ்., எம்.பில்., பட்டங்களைப் பெற்றுக் கொண்டு வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பொது நூலகத் துறையில் ஆயிரக்கணக்கான நூலகர் பதவிகள் காலியாகவே வைக்கப்பட்டுள்ளன. சென்னை நகரில் உள்ள சுமார் 150 கிளை நூலகங்களில், 60}க்கும் மேற்பட்ட கிளை நூலகங்கள் நூலகர்கள் இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றை நிர்வகிப்பது தினக்கூலிகள்தான். அதிலும் கிராமப்புற பகுதி நேர நூலகங்களை நிர்வகிப்பவர்களுக்கு தினக்கூலி ரூ.20 மட்டும்.
இந்திய அளவில் பெருமை பெற்ற சென்னை, கன்னிமரா பொது நூலகத்தில் 150 பணியாளர்களும், நூலகர்களும் பணியாற்ற வேண்டிய இடத்தில், தற்போது வெறும் 22 பேர்தான் பணியாற்றுகிறார்கள். அந்த நூலகத்தில் நூலகப் பணிகள் எப்படிச் செம்மையாக நடைபெறும்? நூலகர்களை கேவலப்படுத்துவது, தமிழ்நாட்டு வாசகர்களைக் கேவலப்படுத்துவதே.
இன்றைய பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளின் செயலற்ற செயலால், உயர்நிலைப் பள்ளிகளின் முன்னேற்றம் தடைபட்டு, தனியாரின் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகள் ஆயிரக்கணக்கில் தோன்றி, கல்வி வியாபாரமும் கருப்புப் பண சுழற்சியும் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பள்ளிக் கல்வியோடு உயர்கல்வியும் சீரழிந்து கொண்டிருக்கிறது.
இந்தியாவிலேயே, தமிழ்நாட்டில்தான் அரசியல் கட்சிகள் அதிகம். கட்சிகளுக்கு மேல் அரசியல் தலைவர்கள் அதிகம். அவர்கள் தாங்கள் இருப்பதைக் காட்டுவதற்காக தினமும் ஒரு அறிக்கையினை தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் மூலம் தவறாது வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள், உயர்நிலைக் கல்வியின் தேக்க நிலை, பொது நூலகத் துறையின் சீரழிவு பற்றி யாரும் அறிக்கைகள் வெளியிடுவதில்லை. பொதுவாக தமிழ்நாட்டில் இன்று ஏழை மக்களும், வாசகர்களும் நூலகங்களுக்கு சென்று படித்து, பொது அறிவு பெற்று, நாட்டு நடப்புகளைத் தெரிந்து கொள்வதை, எந்த அரசியல் கட்சித் தலைவர்களும் விரும்பவில்லையா?
"நூலக வரி' செலுத்தும் பொதுமக்கள், படித்துப் பயன்பெற நூலகங்கள் செம்மையாகச் செயல்படவில்லை. படிக்கின்ற நாடுதான் முன்னேறும்!

செவ்வாய், 24 மார்ச், 2015

கும்பக்கரை நீர்வீழ்ச்சி

தேனி மாவட்டம், பெரியகுளத்திலிருந்து சுமார் எட்டு கி.மீ தொலைவில் உள்ளது கும்பக்கரை நீர்வீழ்ச்சி. தேனி மாவட்டத்தில் உள்ள நீர்வீழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்நீர்வீழ்ச்சி கொடைக்கானல் அருகில் உள்ள பாம்பாறு பகுதியில் தோன்றி பாறைகளிடையே பாய்ந்து கீழே நீர்வீழ்ச்சியாக விழுகிறது. இந்த நீர்வீழ்ச்சி சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையாக உள்ளது. மழைக் காலத்தில் நீர்வீழ்ச்சியில் விழும் தண்ணீர் அதிகமாகவும், கோடை காலத்தில் குறைவாகவும் இருக்கிறது. நீரின் வேகம் அதிகமாகும் போது அருவியில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்படுகிறது.

நீர்வீழ்ச்சியின் பகுதிகள்

கும்பக்கரை நீர்வீழ்ச்சிப் பகுதியில் இந்த நீர்வீழ்ச்சி தவிர தண்ணீர் செல்லும் தடங்களிலுள்ள வழுக்குப் பாறை, யானைக் கெஜம், உரல் கெஜம், பாம்பு கெஜம் என்று அழைக்கப்படும் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் நீராடி மகிழ்கின்றனர். இந்த தண்ணீர் தடப்பகுதிகளில் சில இடங்களில் குளிப்பது ஆபத்தானது என்று தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகரிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் இந்த நீர்வீழ்ச்சிக்கு குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் பேருந்துகளை இயக்குகிறது.

ஆகாயகங்கை அருவி

ஆகாயகங்கை அருவி இந்தியாவின் தென் மாநிலமான தமிழ் நாட்டில், நாமக்கல்லுக்கு அருகில் உள்ள கொல்லி மலையிலுள்ள அய்யாறு ஆற்றின் மீது அமைந்துள்ளது.

கொல்லி மலையில் அமைந்துள்ள அரப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் ஆகாயகங்கை அருவி உள்ளது. இங்கு செல்ல தமிழக அரசின் சுற்றுலா துறை படிக்கட்டுக்கள் அமைத்துள்ளது.

அருவியிலிருந்து வெளிவரும் நீரானது கிழக்கு நோக்கி பாய்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் புளியஞ்சோலை பகுதியை அடைகிறது.
இந்த மலை 2000 மீட்டர் உயரம் கொண்டதாகும். இந்த மலைக்கு செல்வதற்கு நாமக்கலில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. மேலும் இங்கு ஒரு உயிரியல் பூங்காவும், படகு சவாரியும் உள்ளன.

அமராவதி அணை

திருப்பூர், கரூர் மாவட்டத்தின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்வதில் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை முக்கிய பங்கு வகிக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பல கிளை நதிகளாக உருவாகி சின்னாறு அருகே சங்கமித்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து பின்னர் காவிரியில் கலக்கிறது.



சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் அவ்வப்போது ஏற்படும் வெள்ளப்பெருக்கில் அமராவதி ஆற்றை ஒட்டிய பல கிராமங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டது. 1950களில் தமிழகத்தில் வேளாண் உற்பத்தியை பெருக்க பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டம், பவானிசாகர் அணை பாசன திட்டம் என பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது தான் அமராவதி ஆற்றில் ஒரு அணையை கட்டி தண்ணீரை தேக்கினால் அப்போதைய உடுமலை தாலுகாவின் கிழக்கு பகுதி, தாராபுரம், கரூர் பகுதிகளில் ஒரு லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும். அங்குள்ள மண் வளத்திற்கு நெல் விளையும் பூமியாகவே மாற்றமுடியும் என பசுமை புரட்சிக்கு வித்திட்ட சி.சுப்ரமணியம் கூறியுள்ளார்.

அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த ராஜாஜியும் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கி 1953ம் ஆண்டு அணை கட்டும் பணிகள் துவங்கின. பாதி பணிகள் முடிவடைந்திருந்தது. நான்கு பணியாளர்கள் அணை கட்ட தேவையான கற்களை ஒரு வண்டியில் ஏற்றிக்கொண்டு கட்டுமானம் நடந்த இடத்திற்கு சென்றனர். 

அதே வண்டியில் பயணம் செய்த துணை பொறியாளர் பார்த்தசாரதி, பணியாளர்கள் அந்தோணி, ஏசைய்யா, பழனிச்சாமி கவுண்டர், ஆறுமுகம் என 4  பேர் பயணம் செய்துள்ளார். திடீரென அந்த வண்டி கவிழ்ந்து அதில் பயணம் செய்த பணியாளர்களும், பொறியாளரும் கற்களுக்கு மத்தியில் சிக்கி உயிரிழந்தனர்.  திடீரென ஒரு நாள் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பின்னர் சில காலம் அணை கட்டும் பணி நிறுத்தப்பட்டது. 

பின்னர் ஒரு வழியாக 1957ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 90 அடி உயரத்தில் கட்டப்பட்ட இந்த அணையால் தற்போது திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு மூலம் 54 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. அதேபோல் 100க்கும் மேற்பட்ட கிராமங்களும் குடிநீர் வசதி பெறுகிறது. உயிரிழந்தவர்களின் நினைவுகள் காலம் முழுவதும் அழியாமல் இருக்க, அணையிலேயே கல்வெட்டாக பதித்து வைத்துள்ளனர். 

'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனார்

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் உள்ள காயாமொழி கிராமத்தில் 1905 ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 27 ஆம் தேதி பிறந்தார். தந்தையார் சிவந்தி ஆதித்தன். தாயார் கனகம் அம்மையார். ‘ஆதித்தனார்’ என்பது அவரது குடும்பப் பெயர். ஆதித்தனாரின் இயற்பெயர் ‘ சிவந்தி பாலசுப்ரமணியன் ஆதித்தன் '.
    தந்தையார் வழக்கறிஞர். சி.பா. ஆதித்தனார் தமது பள்ளிப் படிப்பை திருவைகுண்டத்தில் பயின்றார். திருச்சிராப்பள்ளியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்ட மேல் படிப்பை முடித்தார்.
    கல்லூரியில் படிக்கும்போதே ‘ தொழில் வெளியீட்டகம்’ என்னும் பதிப்பகத்தை தொடங்கி, மெழுகுவர்த்தி செய்வது எப்படி ? தீப்பெட்டி தயார் செய்வது எப்படி? ஊதுபத்தி தயார் செய்வது எப்படி ? சோப்பு தயார் செய்வது எப்படி? பேனா மை தயாரிப்பது எப்படி ? என்பன போன்ற பல நூல்களை எழுதி வெளியிட்டார். இதற்காக ஒரு அச்சகத்தை விலைக்கு வாங்கினார். இதன் மூலம் சுய தொழில் மீது அவருக்கு இருந்த ஆர்வம் வெளிப்படுவதுடன், தமிழக இளைஞர்கள் சுயமாக தொழில் செய்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற நல்ல சிந்தனையையும் அறிய முடிகிறது.
    சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார். இங்கிலாந்து தலைநகர் லண்டன் மாநகரத்திற்குச் சென்று படித்து பாரிஸ்டர் பட்டம் பெற்றார். லண்டனில் படிக்கும் போதே நிருபராக பணியாற்றி படிப்புச் செலவிற்கு பணம் சம்பாதித்தார். சுதேசமித்திரன் இதழ், டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் லண்டனிலிருந்து வெளி வந்த ஸ்பெக்டேட்டர் வார இதழ் முதலிய இதழ்களுக்கு செய்திக் கட்டுரைகள் எழுதி அனுப்பினார். இந்திய இதழ்களுக்கு லண்டனில் செய்தியாளராக இருந்த முதல் தமிழர் இவரே. லண்டனில் படிக்கும்போதே இதழ்கள் நடத்திட வேண்டுமென்ற உயர்ந்த இலட்சியத்தை உள்ளத்தில் ஏற்றார்.
    லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்று தமிழகம் திரும்பியவுடன், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர் பணியை மேற்கொண்டார். சிங்கப்பூர் நாட்டில் பெரும் தொழில் அதிபராக விளங்கிய ஓ. ராமசாமி நாடார் என்பவரின் மகள் ஆச்சியம்மாள் என்ற கோவிந்தம்மாளை வாழ்க்கைத் துணையாக ஏற்றார்.
    சிங்கப்பூரில் வழக்கறிஞராகப் பணிபுரிந்த பொழுது, நல்ல வருமானம் கிடைத்தது. ஆனால், சி. பா. ஆதித்தனாரின் சிந்தனையெல்லாம் இதழ் நடத்த வேண்டும் என்பதையே சுற்றிச் சுற்றி வந்தது. அவரது மாமனாரோ அதிக வருமானம் வரும் வழக்கறிஞர் தொழிலை விட்டு விட்டு இதழ் நடத்தினால் பணம் சம்பாதிக்க முடியாது என்றார்.  “ அரிசி விற்றால் சாக்காவது மிச்சப்படும், பருப்பு உடைத்தால் உமி, குருணையாவது மிச்சப்படும், இதழ் நடத்தினால் என்ன மிஞ்சும் ? இருப்பதும் போய்விடும் ” எனக் கூறி இதழ் நடத்துவதை தடுத்தார். ஆனாலும், இதழ் நடத்தியே தீருவது என்பதில் ஆதித்தனார் உறுதியாக இருந்தார். வேறு வழியில்லாமல் அவரது மாமனாரும் ஒத்துக் கொண்டார்.
    முதன் முதலில் 'மதுரை முரசு' என்னும் வாரம் இருமுறை வெளிவரும் இதழைத் தொடங்கினார். பின்பு, 'தமிழன்' என்னும் வார இதழைத் தொடங்கினார். தமிழன் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தது தமிழின் மீது அவர் கொண்ட காதல் தான்
.
    மதுரையில் நடந்த சுதந்திரப் போராட்டத்தில் , கலவரம் ஏற்பட்டு காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டார்கள் ஆனால், ஒருவர் மட்டுமே கொல்லப்பட்டதாக செய்தி வெளியிட வேண்டும் என்று காவல்துறையினர் கட்டளையிட்டார்கள். ஆதித்தனார் "மதுரையில் போலீஸ் துப்பாக்கிச் சூடு! மூன்று பேர் சாவு!" என முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் செய்தி வெளியிட்டார்.
    அதைப் பார்த்த ஆங்கிலேய அதிகாரிகள் போர்க்கால அதிகாரத்தைப் பயன்படுத்தி 'மதுரை முரசு' இதழைத் தடை செய்தனர். அதிகாரிகள் ஆணை பிறப்பித்தாலும் உண்மைச் செய்தியை வெளியிட ஆதித்தனார் தயங்கியது இல்லை என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.
    1942 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் தேதி 'தினத்தந்தி' நாளிதழை வெளியிட்டார். தலையங்கத்தில் நாட்டின் அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளை மக்களுக்குப் புரியும் விதத்தில் எளிய தமிழ் நடையில் விளக்கினார். "ஒரு படம் ஆயிரம் சொல்லுக்குச் சமம்" என்னும் சீன பழமொழிக்கேற்ப, தமது தினத்தந்தி நாளிதழில் படங்களுடன் செய்தி வெளியிட்டார்.
    பாமர மக்களும், எழுதப் படிக்கத் தெரிந்தவர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய சொற்கள், சிறிய வாக்கியங்கள், கவர்ச்சி மிகுந்த தலைப்புகள், கருத்துப் படங்கள் இவற்றைக் கையாண்டார். அரசியல் , பொருளாதாரம், வர்த்தகம், திரைப்படம், விளையாட்டுச் செய்திகள் ஆகியவற்றை வெளியிட்டு தமிழக மக்கள் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளவும், நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ளவும் உதவினார்.
     தமிழகத்தில் இன்று 'தினத்தந்தி' நாளிதழ் 12 நகரங்களிலிருந்தும், புதுச்சேரி, மும்பை , பெங்களுர் முதலிய பெருநகரங்களிலிருந்தும் வெளி வருகிறது. பட்டித்தொட்டியெங்கும், ஊர்தோறும் தினத்தந்தி நாளிதழ் பரவி பல லட்சக்கணக்கான வாசகர்கள் படிக்கும் நிலைக்கு வளர்ந்துள்ளது. மேலும், தினத்தந்தி குழுமத்திலிருந்து தினத்தந்தி, மாலை முரசு, ராணி, ராணி முத்து, ராணி காமிக்ஸ் போன்ற வார, மாத இதழ்களும் வெளியிடப்படுகிறது.
    சி.பா. ஆதித்தனார் 1942 முதல் 1953 வரை தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகச் செயல்பட்டார். 'தமிழ்ப்பேரரசு' என்னும் நூல் மூலம் தமிழின முன்னேற்றத்திற்கு செய்ய வேண்டியவைகளை வலியுறுத்தினார்.
    1942 ஆம் ஆண்டு 'தமிழரசுக் கட்சி'யைத் தொடங்கி நடத்தினார். பின்பு. 1958 ஆம் ஆண்டு 'நாம் தமிழர்' இயக்கத்தையும் தொடங்கி செயல்படுத்தினார்.
    1960 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போரில் கலந்து கொண்டு சிறை சென்றார். அதே போன்று 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் கலந்து கொண்டதால் சிறையில் அடைக்கப்பட்டார்.
    பேரறிஞர் அண்ணா அழைத்ததால் தி. மு. க.வில் இணைந்தார். 1957 முதல் 1962 வரை தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். அவர் சபாநாயகராகப் பொறுப்பேற்றது முதல் சட்ட மன்றத்தில் சபை ஆரம்பிக்கும் முன்பு தினம் ஒரு திருக்குறள் கூறி அவையைத் தொடங்கினார். தமிழக அமைச்சரவையில் கூட்டுறவு, விவசாய அமைச்சராக பணியாற்றினார்.
    திருச்செந்தூரில் ஆதித்தனார் கல்லூரி ஏற்படுத்தப்பட்டு அக்கல்லூரியில் இதழியல் ஒரு பாடமாக வைக்கப்பட்டுள்ளது. சி.பா. ஆதித்தனார் 'இதழாளர் கையேடு' என்னும் நூலை வெளியிட்டார். அந்த நூல் இதழாளர்களுக்கு மிகவும் பயனுடையதாக இன்றும் விளங்குகிறது.
    'உடல் மண்ணுக்கு , உயிர் தமிழுக்கு' என்னும் முழக்கத்தின் மூலம் தமிழர்களை தட்டியெழுப்பினார். தமிழர்கள் தங்கள் கையொப்பத்தின் தலைப்பெழுத்தையும், கையெழுத்தையும் தமிழில் எழுத வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
    தாய் நாட்டுப் பற்றும், தமிழ் மக்கள் மீது அன்பும் கொண்டிருந்தார். பாமரனையும் படிக்க வைக்க வேண்டும், தமிழ் மொழி, தமிழினம் மேம்பாடு அடைய வேண்டும் என்பதற்காக தமது உயிர் மூச்சு உள்ளவரை வாழ்ந்தார் சி.பா. ஆதித்தனார்! 1981 ஆம் ஆண்டு மே திங்கள் 24 ஆம் நாள் காலமானர். அவரது புகழ் இதழியல் உள்ளவரை நிலைத்து நிற்கும்.

சனி, 21 மார்ச், 2015

நாணயங்கள் வந்த விதம்

பண்டைய காலத்தில் நாணயங்களை 'காசுகள்' என்றும் 'பணம்', 'வராகன்' என்றும் அழைத்திருக்கிறார்கள். 1640 ல் 'ஹேல்' என்னும் அதிகாரி காலத்தில், நாணயச் சாலை ஒன்று ஏற்படுத்தப்பட்டு, முகமதியர் (இஸ்லாமியர்) முத்திரையோடு வெள்ளி நாணயங்களை அச்சடித்து வெளியிட, சென்னை தங்க சாலைக்கு (நாணயச்சாலை) மாற்றியிருக்கிறார்கள்.     
                சிந்தாதிரிப்பேட்டையிலும் நாணயச்சாலை ஒன்று ஏற்படுத்தப்பட்டு, அதனை லிங்கசெட்டி என்பவர் கவனித்து வந்திருக்கிறார். வங்காளத்திற்கு ஆற்காட்டு நாணயங்கள் இங்கிருந்துதான் அனுப்பபட்டன. ஆரம்பத்தில் இது கோட்டையிலும் அமைக்கப்பட்டு, குத்தகை மூலம் நாணயம் அச்சடிக்கப்பட்டு வந்திருக்கிறது. தங்கசாலை குத்தகைக்காரரான லிங்கசெட்டியின் பரம்பரையினர் 'காசுக்கார செட்டிமார்' என்று இன்னும் அழைக்கப்பட்டு வருகிறார்கள்.         
                1814 ல் சர்.தாமஸ்மன்றோ காலத்தில் நடைமுறை வழக்கத்திலிருந்த நட்சத்திர வராகனுக்குப் பதிலாக ரூபாய் நாணயங்கள், சென்னை மாகாண‌த்தின் நிரந்தர செலவாணியாக்கப்பட்டிருக்கிறது. ஒரு வராகனுக்கு 3.5(மூன்றரை) ரூபாய்கள் என்று கூறப்பட்டு புதிய நாணயங்கள், கால் ரூபாய்கள், இரண்டணா‌க்கள், அணாக்கள் என்று அழைக்கப்பட்டிருக்கின்றன. இவையெல்லாமே வெள்ளியினாலேயே செய்யப்பட்டிருக்கின்றன. இதைத் தவிர அணாவுக்கு 6 பைசாக்கள் என்கிற வீதத்தில், சிறு செப்புக் காசுகளும் வெளியிடப்பட்டிருக்கின்றன.
                காலப்போக்கில் நாணயசாலை திருத்தியமைக்கப்பட்டு தங்கசாலையின் வடக்கு முனையில் உள்ள நாணய மாளிகை இடத்திற்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.
                இந்த மாளிகை உள்ள இடத்திற்கு அருகில் இருந்த வெடிமருந்து சாலையில் பல தடவை விபத்து ஏற்பட்டதால், அதனை கறுப்பர் பட்டினத்து சுவருக்கு சற்று அப்பால் மாற்றிவிட்டு, அந்த இடத்தில் 1807ல் புதிய நாணயச்சாலை கட்டிடம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. 1833ல் சென்னையில் இருந்த தங்க சாலையை மூடிவிட்டு, கல்கத்தாவில் இருந்த நாணயச்சாலையில் நாணயங்கள் அச்சிடப்பட்டிருக்கின்றன. 

கண்ணாடி -1


கத்திரி செடிகள் கருகின: விவசாயிகள் கவலை

பெரம்பலூர் மாவட்டத்தில் தம்பிரான்பட்டி, வேலூர், ரெங்கநாதபுரம், சத்திரமனை, புதுநடுவலூர், வெள்ளனூர், எசனை, அரசலூர், அன்னமங்கலம், எளம்பலூர், செங்குணம், பாளையம், லாடபுரம், திருப்பெயர், குரும்பலூர் உள்ளிட்டப் பல்வேறு கிராமங்களில் கத்திரிக்காய் அதிகமாக விளைகிறது. இவை சாகுபடி செய்த விவசாயிகளைக்கொண்டே உழவர் சந்தைக்கும், காய்கறி மார்க்கெட்டிற்கும் தினமும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் ஏற்கனவே செடிகளில் பூச்சித்தாக்குதல், காய்ப்புழு தாக்குதல் ஆகியவற்றால் அவதிப்பட்டுவந்த விவசாயிகளுக்கு, சீசனுக்கு முன்பாகவே கொளுத்துகிற வெயில் தற்போது புதிய வேதனை யைத்தான் தந்துள்ளது. வெயில் தாக்கத்தால் கத்திரிச்செடிகளில் பூத்திருக்கும் பூக்கள், பிஞ்சுகள் எளிதில் கருகிப்போய் கொட்டிவிடுகின்றன. இதனால் விவசாயிகளுக்கு மகசூல் பாதிப்பு ஏற்படுகிறது. ஏற்கனவே, சாகுபடி செய்த கத்திரிக் காய்களை மார்க்கெட் வியாபாரிகள் கிலோ ரூ. 7க்கு தான் கொள்முதல் செய்கின்றனர். ஆனால், உழவர் சந்தையில் கத்திரிக்காய் 18ம் தேதி நிலவரப்படி கிலோ ரூ. 16க்கும், மார்க்கெட்டில் கிலோ ரூ. 18க்கும், கிராமப்புறங்களில் கிலோ ரூ. 20க்கும் ரூ.22க்கும் விற்கப்பட்டு வருகிறது. இதில் உரம்போட்டு, தண்ணீர் பாய்ச்சி, பூச்சி மருந்து தெளித்து, தொழிலாளர்களைக்கொண்டு பராமரித்து, அறுவடை செய்திடும் விவசாயிகளுக்கு செலவுத் தொகையே மிஞ்சாத நிலையில், வெயிலுக் குத் தாங்காமல் பூவும், பிஞ்சும் கருகுவது மிகுந்த வேத னையை அளித்துள்ளது. இதனால் கத்திரி சாகுபடி விவசாயிகள் கலங்கிப்போய் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

திங்கள், 16 மார்ச், 2015

நார்வே தமிழ்த் திரைப்பட விருதுகள் பட்டியல்

நார்வே தமிழ்த் திரைப்பட விருதுகள் பட்டியல்

ஆறாவது ஆண்டாக நார்வே தமிழ் திரைபப்ட விழா சினிமா கலைஞர்களோடும், ஆர்வலர்களோடும் கொண்டாட உள்ளது. 2014ம் ஆண்டுக்கான நார்வே தமிழ் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. ஏப்ரல் 23- 26 வரை நான்கு நாட்கள் நார்வேயில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.

நார்வே திரைப்பட விருதுகள் பட்டியல்:

சிறந்த படம் - குக்கூ

சிறந்த இயக்குநர் - வசந்தபாலன் (காவியத்தலைவன்)

சிறந்த நடிகர் - சித்தார்த் (காவியத்தலைவன்)

சிறந்த நடிகை - வேதிகா (காவியத்தலைவன்)

சிறந்த கதாபாத்திர நடிகர் - சிம்ஹா (ஜிகர்தண்டா)

சிறந்த குணச்சித்திர நடிகர் - நாசர் (காவியத்தலைவன்)

சிறந்த குணச்சித்திர நடிகை - குயிலி (காவியத்தலைவன்)

சிறந்த இசையமைப்பாளர் - சந்தோஷ் நாராயணன் (ஜிகர்தண்டா, குக்கூ )

சிறந்த தயாரிப்பு - ராமானுஜன் (கேம்பர் சினிமா)

சிறந்த பாடலாசிரியர் - யுகபாரதி(குக்கூ)

சிறந்த பாடகர் - ஹரிச்சரண் (காவியத்தலைவன்)

சிறந்த பாடகி - வைக்கம் விஜயலட்சுமி (என்னமோ ஏதோ)

சிறந்த ஒளிப்பதிவாளர் - வெற்றிவேல் (கயல்)

சிறந்த எடிட்டர் - விவேக் ஹர்ஷன் (ஜிகர்தண்டா)

சிறந்த சமூக விழிப்புணர்வு திரைப்படம் - சிகரம் தொடு

வாழ் நாள் சாதனையாளர் விருது - கே.பாலசந்தர்

கலைச்சிகரம் விருது - சிவகுமார்

சிறப்பு ஜுரி விருது - வின்சென்ட் (கயல்)

பாலுமகேந்திரா விருது - ரா.பார்த்திபன் (கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்)

பாலசந்தர் விருது - விவேக்

உலகின் முக்கிய சிகரங்கள்

பெயர்
நாடு
உயரம் (மீ)
எவரெஸ்ட்
நேபாளம்-திபெத்
8,848
எவரெஸ்ட்
தென் சமித்
8,750
காட்வின்
இந்தியா (Pok)
8,611
கஞ்சன் ஜங்கா
நேபாளம்-இந்தியா
8,597
லோட்சே
       -
8,511
தௌலாகிரி
நேபாளம்
8,167
நங்கபர்வதம்
இந்தியா
8,125
அன்னபூர்ணா
நேபாளம்
8,091
நந்தா தேவி
இந்தியா
7,817
மவுன்ட்காமத்
இந்தியா
7,756
சல்டோரா கங்கிரி
இந்தியா
7,742
குர்லாமண்டதா
திபெத்
7,728
திரீச்மிர்
பாகிஸ்தான்
7,700
மின்யாகொன்கா
சீனா
7,690
முஸ்தாக் அதா
சீனா
7,546
கம்யூனிசமலை
தஜிகிஸ்தான்
7,495
சோமோ லஹரி
இந்தியா-திபெத்
7,100
அகன்ககுவா
அர்ஜென்டினா
6,960
ஒஜோஸ் டெல் சலாடோ
அர்ஜென்டினா சிலி
6,885
மெர்சிடாரியோ ஹாஸ்சரன்
பெரு
6,768
லியுலாய்லாகோ வால்கனோ
சிலி
6,723
துபன்கடோ
சிலி-அர்ஜென்டினா
6,550
சஜாமா வால்கனோ
பொலிவியா
6,520
இலிமானி
பொலிவியா
6,462
வில்கேனோடா
பெரு
6,300
சிம்போரஸோ
ஈக்வாடர்
6,267
மெக்கின்லே மலை
அலாஸ்கா
6,194
கோடோபாக்‌ஷி
ஈக்வாடர்
5,897
கிளிமஞ்சாரோ
தான்சானியா
5,895
எல்பரஸ் மலை
ஜார்ஜியா
5,642
பிளாங்க் மலை
பிரான்ஸ்-இத்தாலி
4,807
குக் மலை
நியூசிலாந்து
3,764

உலகின் முக்கிய கடல்கள்

கடல்                                                                           பரப்பு                  சராசரி
                                                                                       ச.கி.மீ.                 ஆழம் மீ.
பசிபிக்                                                                           16,62,41,000            10,920
அட்லாண்டிக்                                                            8,65,57,000             8,605
இந்தியன்                                                                    7,34,27,000             7,125
ஆர்டிக்                                                                          94,85,000              5,122
தென் சீனக்கடல்                                                        29,74,600             5,514
கரீபியன் கடல்                                                             25,15,900           7,680
மெடிட்டரேனியன் கடல்                                          25,10,000            5,150
பெர்ரிங் கடல்                                                                22,61,000            5,121
மெக்ஸிகோ வளைகுடா                                          15,07,600            4,377
ஒக்கோத்ஸ்க் கடல்                                                   13,92,100              3,475
ஜப்பான் கடல்/கிழக்குகடல்                                    10,12,900              4,000
ஹட்சன் விரிகுடா                                                       7,30,100               259
கிழக்கு சீனக் கடல்                                                       6,64,600               3,000
அந்தமான் கடல்                                                           5,64,900               4,450
கருங்கடல்                                                                       5,07,900               2,243
செங்கடல்                                                                         4,53,000               2,246

உலகின் ஆழமான ஏரிகள், குகைகள், எரிமலைகள்

ஆழமான ஏரிகள்
ஏரிகள்
அமைவிடம்
உயரம் (மீ)
பைகல்
ருஷ்யா
1,620
தங்கநிய்கா
ஆப்பிரிக்கா
1,463
காஸ்பியன் கடல்
ஆசியா-ஐரோப்பா
1,025
மலாவி நியாசா
ஆப்பிரிக்கா
706
இஸிக்-குல்
கிர்கிஸ்தான்
702

எரிமலைகள்
பெயர்
நாடு
உயரம் (மீ)
லஸ்கார்
சிலி
5,990
கோட்டோ பாக்ஸி
ஈக்வாடர்
5,897
கயூச்சிவாஸ்காயா
ருஷ்யா
4,750
கோலிமா
மெக்ஸிகோ
4,268
மௌனாலோவா
ஹவாய்
4,170
காமரூன்
காமரூன்
4,070
ஃபயூகோ
கௌதமாலா
3,835
எரோபஸ்
அண்டார்டிகா
3,795
நைராகோங்கோ
சாயிர்
3,475
எட்னா
சிசிலி
3,369
லைமா
சிலி
3,121
லிலியாம்னா
அலாஸ்கா
3,076
நயாமுராகிரா
சாயிர்
3,056
செயின்ட் ஹெலன்ஸ்
அமெரிக்கா
2,949

ஆழமான குகைகள்
குகைகள்
அமைவிடம்
ஆழம்  (மீ)
ரெஸ்யூ டியூ ஃபோய்லிஸ்
பிரான்ஸ்
1,455
ரெஸ்யூ டி லா ஃபிரே முயு
பிரான்ஸ்
1,321
செஸ்நயா காகசஸ்
ருஷ்யா
1,280
சிஸ்டமா ஹவாட்லா
மெக்ஸிகோ
1,220

இந்தியாவில் மழைப்பொழிவு

வானத்தில் வெப்பநிலை மிகக் குறைவாக இருக்கும் போது மழை பனியாகிறது. அந்தப் பனி பூமியை அடையும் வரை வெப்பநிலை குறைவாகவே இருந்தால் ‘பனி மழையாகப்’ பொழிகிறது. பனியாக ஆரம்பிக்கும் மழை காற்றில் புகுந்து பூமிக்கு வரும் வழியில் காற்று மண்டலத்தில் எங்காவது வெப்பம் உறையும் வெப்ப நிலையை விட அதிகமாக இருக்கும் போது நீராகி நிலத்தை நெருங்கும் முன் மீண்டும் குறைந்த வெப்பம் இருக்குமானால் சிறு ‘ஐஸ் கட்டிகளாக’ விழும். பனியாக வரும் மழைக் காற்றில் புகுந்து பூமிக்கு வரும் வழியில் காற்று மண்டலத்தில் எங்காவது வெப்பம் உறையும் வெப்ப நிலையை விட அதிகமாக இருக்கும் போது ‘நீராகி’ விடுகிறது. பூமியில் இருந்து மிகக் கொஞ்சம் உயரத்திற்கே குறைந்த வெப்பம் இருந்து நீர் பனியாக விழாமல் பூமியில் விழுந்த பின் நிலத்தில் குறைந்த வெப்பம் காரணமாகப் பனியானால் அது ‘உறையும் (கண்ணாடி போல்) மழை’.
rain 350ஒரு நாளில் பெய்யும் மழை அளவு 2.5 மி.மீ வரை பெய்தால் அன்றைய நாளில் மழை பெய்தது என்றும், 2.5 - 7.5 மி.மீ வரை பெய்தால் லேசான மழை, 7.6 - 35.5 மி.மீ வரை மிதமான மழை, 35.6 - 64.4 மி.மீ வரை பலத்த மழை, 64.5 - 124.4 மி.மீ வரை மிக பலத்த மழை, 124.5 மி.மீ மேல் பொழிந்தால் அது அசாதாரண பலத்த மழையாகவும் கணக்கிடப்படுகிறது. அசாதாரண மழை பெரும்பாலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி, இமய மலைப்பகுதி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் காணப்படுகிறது. இந்தியாவில் அதிகபட்சமாக மேகாலயாவிலுள்ள சிரபுஞ்சியில் 11,000 மி.மீட்டர் மழை பொழிகிறது. மழை மேகங்களில் நுண்ணிய உப்புத் துகள்கள், பனிக்கட்டி, சில்வர் அயோடைட் படிமங்கள், திண்ம நிலை கார்பன்-டை-ஆக்ஸைடு உள்ளிட்டவை தூவுவது போன்றவை செயற்கை மழையைப் பொழிவிக்கும் முறைகளாகப் பின்பற்றப்படுகின்றன.
இந்தியா 804’ வட அட்சம் முதல் 3706’ வட அட்சம் வரையிலும் 6807’ கிழக்கு தீர்க்கம் முதல் 97025’ கிழக்கு தீர்க்கம் வரையிலும் பரவி 32,87,263 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது. 23 ½0 வடக்கு அட்சமாக கடகரேகை இந்தியாவின் குறுக்காக சென்று நாட்டை வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்ப மண்டலம் என இரு பகுதிகளாகப் பிரிக்கிறது. வெப்ப மண்டல நாடுகள் என்று அழைக்கப்படும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஏமன், தாய்லாந்து ஆகிய எட்டு நாடுகளும் ஒரு குழுவாக 2004 முதல் வங்கக் கடலில் உருவாகும் புயல்களுக்கு அந்தந்த நாட்டு மொழியில் 8 பெயர்கள் என மொத்தம் 64 பெயர்களைப் பட்டியலிட்டு சுழற்சி முறையில் பெயரிட்டு வருகின்றன. கொரியாலிஸ் விளைவு (Coriolis Effect) என்பது நிலநடுக்கோட்டுக்கு வடக்கே உருவாகின்ற புயல்கள் அனைத்தும் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கமாகச் (Anti Clockwise) சுழல்வதாகவும், நிலநடுக்கோட்டுக்குத் தெற்கே உருவாகின்ற புயல்கள் இடமிருந்து வலமாகச் (Clockwise) சுழல்வதாகவும் இருக்கும்.
இந்தியா வடக்கே காஷ்மீர் முதல் தெற்கே கன்னியாகுமரி வரை 3214 கி.மீ நீளத்தையும், மேற்கே குஜராத் முதல் கிழக்கே அருணாச்சல பிரதேசம் வரை 2933 கி.மீ அகலத்தையும் கொண்டுள்ளது.
மழை மேகங்கள் கரையை விட்டுவிட்டு மத்தியிலேயே சென்று பொழிவதில்லை; அதன் காரணமாகத்தான் வானிலை அறிக்கைகள் பெறப்படும் போது ‘கடற்கரையோர மாவட்டங்கள்’ என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. இந்தியக் கடற்கரையின் மொத்த நீளம் 6000 கி.மீ. அந்தமான் நிக்கோபார் மற்றும் இலட்சத்தீவு கடற்கரைகளையும் சேர்த்து அதன் நீளம் 7516 கி.மீ.