சனி, 18 ஜூன், 2016

பயணிகள் நிழற்கூடம் (ம) பேருந்து நிலையம் இல்லாத வட்டம்

பயணிகள் நிழற்கூடம் (ம) பேருந்து நிலையம் இல்லாத வட்டம் :
    
      பெரம்பலுார் மாவட்டத்தின் மிகப்பெரிய வட்டமாக திகழ்வது வேப்பந்தட்டை வட்டம். 1997 –ம் ஆண்டில் இருந்து 25 ஆண்டுகளா வேப்பந்தட்டை வட்டமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் இத்தனை ஆண்டுகள் ஆகியும் பொது மக்கள் பயன்பாட்டுக்கென்று பயணிகள் நிழற்கூடம் (ம) பேருந்து நிலையம் இல்லாத வட்டமாக திகழ்கிறது. வே. வட்டாரத்தில் 29 கிராம ஊராட்சிகளும், 2 பேரூராட்சிகளும், 4 காவல் நிலையங்களும், 1 துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகமும் , 1 அரசு மேல்நிலைப்பள்ளியும், மாவட்ட தலைமை மருத்துவமனை, சார்பதிவாளர் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. 





        வேப்பந்தட்டை வட்டாசியர் (ம) ஒன்றிய அலுவலகத்திற்கு தினந்தோறும் 5000 ஆயிரத்திற்கும் அதிகமாக பொதுமக்கள் வந்து செல்கின்றனர். நடப்பாண்டு 2016-17 ல் அரசு கலைக்கல்லுாரி (இருபாலர்) செயல்பட்டு வருகிறது. வேப்பந்தட்டை வழியாக பெரம்பலுார் – ஆத்துார் - சேலம் நெடுஞ்சாலை செல்கிறது.  நிழற்கூடம் அமைய போதுமான இட வசதிகள் இருந்தும் 25 ஆண்டுகளாக கட்டப்படவில்லை. இதனால் பயணிகளும் பொதுமக்களும் பெரிய அவதிக்குள்ளாகின்றனர். இப்பகுதி மக்கள் பேருந்து நிலையமும், காவல் நிலையமும் அமைக்க வேண்டுமென பலமுறை அரசிற்கும், அரசியல்வாதிகளுக்கும் கோரிக்கை விடுத்தும் பலனில்லை. 15 கி.மீ தொலைவில் அரும்பாவூா் நிலையமும், 10 கி.மீ தொலைவில் பெரம்பலுார் காவல் நிலையமும் உள்ளது. புறக்காவல் நிலையம் இருந்தும்  சரியாக செயல்படவில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா????? 

கோரைப்பாய் வாழ்க்கை

                         கோரைப்பாய்

வெளியில் சென்று களைத்து வீட்டுக்கு வந்ததும் பாயை விரித்து படுத்தால் கிடைக்கிற சுகமான துாக்கம் இருக்கிறதே அடடா !!!! அதற்கு ஈடு இணையேது. இந்த பாய் தாயாரிப்பில் உலக புகழ்பெற்றது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்தமடை பாய்.
     
இதற்கு அடுத்தபடியாக ஏழைகளின் மெத்தையான கோரைப்பாய் தயாரிப்பில் முன்னணியில் இருக்கிறது திருச்சி மாவட்டம் ஆமுர் கிராமம். தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலும் புகழ்ப்பெற்ற இந்தப்பாய்கள் நுாற்றாண்டு பாரம்பரியம் மிக்கதாகும். பாய் தயாரிக்கும் தொழில் பரம்பரை பரம்பரையாக அடுத்தடுத்த தலைமுறையினரால் நடத்தப்பட்டு வருகிறது. முசிறிலிருந்து – ஆமுர் வரை காவிரிக்கரையோர பகுதியில் சுமார் 1200 ஏக்கர் பரப்பளவில் கோரைப்புல் சாகுபடி செய்யப்படுகிறது.
சாகுபடி முறை :
     ஆமுர் ஸ்டாலின் அவர்கள் கூறியது-
         நிலத்தை உழுது கொண்டு கோரைக்கிழங்கை 1 அடி இடைவெளியில் ஊன்ற வேண்டும். ஒரு ஏக்கருக்கு 1500 கிழங்கு வரை தேவைப்படும். கிழங்கை தள்ளி தள்ளி ஊன்ற வேண்டும். அப்போது தான் கிழங்கு புடைதள்ளி வளரும். இரண்டு அடி வளர்ந்து பிறகு நோய் தொற்று ஏற்படாமல் மருந்து அடிக்க வேண்டும். முன்பெல்லாம் வருடத்திற்கு இரண்டு அறுவடை செய்வோம் ஆனால் இப்போது தண்ணீர் பற்றாக்குறையால் ஒரு போகம் விவசாயம் செய்வதே பெரிதான காரியம். காரணம் தண்ணீர் பற்றாக்குறைதான். வளர்ந்த கோரைப்புல் அறுவடை செய்ய 1 ஏக்கருக்கு குறைந்தது 8 நாள் தேவைப்படுகிறது. கோரைக்கு நோய் தாக்கம் உண்டு. வளர்ந்த கோரையில் நஞ்சு போன மாதிரி இருக்கும். இவை அறுவடை செய்யும் போது உதிர்ந்து போய்விடும். 1 ஏக்கருக்கு பெரிய கட்டு 4 கட்டு வரை உதிர்ந்து விடும். (மதிப்பு 5 ஆயிரம்). கோரைப்புல் அறுத்த பிறகு ஒரு ஆள் உயரஅளவு குச்சியை கொண்டு அறுக்கப்படுகிறது. அறுத்த கோரைப்புல்லை ஆற்றங்கரையோர பகுதியில் கொண்டு சென்று இயந்திரத்தின் உதவியுடன் இரண்டாக கிழிக்கப்பட்டு காய வைக்கப்படுகிறது. நல்லா காய்ந்த பிறகு தரம் பிரிக்கப்படுகிறது. கட்டு கட்டாக கட்டி பாய் நெய்வதற்கு அனுபப்படுகிறது.
     பாய் நெய்வதில் பெரும்பங்கு வகிப்பது காய்ந்த கோரைகளுக்கு சாயம் பிடிப்பது ஆகும். இச்சாயங்கள் அனைத்தும் மும்பையிலிருந்து ஏஜெண்டுகளின் உதவியுடன் வாங்கப்படுகிறது. Vilat, green, yellow, blue, rose, genthi ஆகிய 5 வகையான சாயங்கள் பயன்படுத்தப்படுகிறது. பெரிய தொட்டியில் தண்ணீர் நீரப்பி கொதிக்க வைத்து 64 சிறிய கட்டுகள் சாயம் பிடிக்கலாம். சாயம் பிடிக்கப்பட்டவை ஒரு நாள் காய வைத்து பாய் நெய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் பாய் நெய்வதற்கு நுால் வந்தவாசியிருந்தும், நரம்பு சேலம் ஓமலுார் பகுதியிருந்து மொத்தமாக வாங்கி  பயன்படுத்தப்படுகிறது.
ஆமுர் பகுதிலியிருந்து மூன்று வகையான பாய்கள் தயாரிக்கப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் பாய் சென்னை, மதுரை, நெல்லை, விருதுநகர் ஆகிய பகுதியிலிருந்து வந்து வாங்கி செல்கின்றனர்.
விவசாயிகள் கோரிக்கை :
·         மானிய விலையில் கோரை கிழிக்கும் இயந்திரம் அரசு வழங்க வேண்டும்.
·         திருவிங்கம் மலையில் கட்டிய தடுப்பணையை அகற்ற வேண்டும்.
·         ஆமுர் பகுதிக்கென்று தனி வாய்க்கால் வேண்டும்.